மழை காரணமாக சென்ற ஆறு நாட்களாக காலையில் நடைப் பயிற்சி போக முடியவில்லை; நேற்றுதான் மீண்டும் ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தேன்.
இன்று (11-11-2009) காலை இந்த புதிய இடத்திற்கு சென்றேன்; வீட்டிலிருந்து 12 நிமிஷ தூரத்தில், RA Puram சாந்தோம் நெடுஞ்சாலையில் பட்டினப்பாக்கம் (Foreshore Estate) போகும் வழியில் உள்ளது.
CENTRAL INSTITUTE OF BRACKISH WATER AQUACULTURE (brackish water = having somewhat a salty taste from a mixture of seawater and fresh water), a UN-supported FAO institute for fish, prawns and shrimp culture, managed by Indian Council of Agricultural Research.
நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே ஆஃபீஸ் இருக்கிறது. இந்த 300 மீட்டர் தூரத்திற்கும் மிக அழகான, சுத்தமான, இருவழி தார் ரோடு போடப்பட்டுள்ளது. நடுவில் median ம், ஓரங்களில் அழகிய 4 அடி அகல நடைபாதைகளும் உள்ளன.
சாலையின் இரு பக்கங்களிலும் நிறைய வேப்ப மரங்கள்; நிறைய செடி, கொடிகள். ஜன சந்தடி கிடையாது, பஸ், கார்கள் இரைச்சலும் கிடையாது. காலை வேளையின் இனிமையான இதமான சூழலும், வேப்பங்காற்று தரும் புத்துணர்வும் நடப்பதற்கு சுகமாக இருக்கிறது. இன்று 40 நிமிஷங்கள் நடந்தேன்.
இதற்கு பக்கத்தில் QUIBBLE ISLAND உள்ளது. அடையாறு நதி (Adyar River estuary) கடலில் சங்கமிக்கும் இடத்தில், இந்தத் தீவு உருவானது (1798ல்). பல வருஷங்களுக்குப் பிறகு இங்கு கிறித்துவர்களுக்கு CEMETERY ஆரம்பிக்கப்பட்டது. நடக்கும்போதே இந்தக் கல்லறைகளை இடது பக்கத்தில் பார்க்கலாம்.
நடப்பதற்கு நல்ல ஒரு இடம். இவ்வளவு நாட்கள் இந்த இடம் என் கண்களில் எப்படி படாமல் இருந்தது ?!
ராஜப்பா
10:00 மணி
11 நவம்ப்ர் 2009
Wednesday, November 11, 2009
Monday, November 9, 2009
Srimad Bhagavatam ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (9-11-2009, திங்கட்கிழமை) காலை பொதிகை டீவியில் “கண்ணனின் கதையமுதம்” என்ற தலைப்பில் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் துவங்கினார். காலை 6-30க்கு. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வேதத்தை விளக்க ஸ்ரீராமாயணம், மஹாபாரதம் என்னும் இரண்டு இதிஹாசங்களும், பதினெட்டு புராணங்களும் உள்ளன. புராணம் என்றால் காலத்தால் பழமையாக இருந்தாலும் கருத்தால் எப்பொழுதும் புதிதாக இருக்கும்.புரா + அபி + நவம். கதை நடந்த காலத்திற்கு மிக பின்னால் எழுதப்பட்டவை புராணங்கள். ஆனால், இதிஹாசங்கள் கதை நடந்தபோதே எழுதப்பட்டவை.
ஸ்ரீமத் பாகவத புராணத்தை வ்யாசர் எழுதினார். மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களையும் அவற்றில் வரும் பல கதைகளையும் அடக்கியது. ஸ்ரீ சுகாசார்யர் இதை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். ப்ரஹ்மாவின் குமாரர் வசிஷ்டர் -- சக்தி -- பராசரர் -- வ்யாஸர் -- ஸ்ரீ சுகர் இது வசிஷ்டரின் வம்ஸாவளி.
மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (அத்தியாயங்கள்). பிறப்பின் மூலத்தை முதல் ஸ்கந்தத்தில் ஆரம்பித்து, பிரளயம், கலிகாலத்துடன் 12ம் ஸ்கந்தம் முடிவுறுகிறது. இடையில் தசாவதாரங்கள் குறித்து விவரமான விளக்கம்.
ராஜப்பா
10:50 மணி
9-11-2009

Friday, November 6, 2009
ஸ்ரீமத் பகவத் கீதை - வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்
கீதை உபன்யாஸம் இன்றோடு (6-11-2009, வெள்ளிக்கிழமை) நிறைவு பெற்றது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சுமார் 3 வருஷங்களாக் 735 உபன்யாஸங்கள் செய்தார். 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள்.
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மம ||
rajappa
10:50 AM on 6 Nov 2009
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மம ||
rajappa
10:50 AM on 6 Nov 2009
Subscribe to:
Posts (Atom)