ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளைப் பற்றி (Sri Velukkudi Krishnan)ஏற்கனவே எழுதியுள்ளேன், தினமும் அவர் சொல்லும் கீதை உபன்யாஸத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். ( இங்கே படிக்கவும்). ஸ்ரீ வேளுக்குடி அவர்கள் "ஸுந்தர காண்டம்" பற்றி ஒரு உபன்யாஸம் செய்துள்ளார். VCD (2) விலை ரூ. 150.00 DVD ரூ. 250.00. விசிடியை 2008 ஜனவரி 25-ஆம் தேதியன்று கிரியில் (Giri Traders, Mylapore) வாங்கினேன். நேற்று (8-2-2008) வெள்ளிக்கிழமை இதைக் கேட்டோம். இரண்டு விசிடிக்களும் சேர்த்து சுமார் இரண்டு மணி 30 நிமிஷங்கள் ஓடுகின்றன. வேளுக்குடியை (Velukkudi Krishnan) பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது? அதே கம்பீர, கணீர் குரல், தங்கு தடையற்ற இனிய தமிழ் ஓட்டம், எல்லாருக்கும் புரியும்படியான எளிய சொற்கள். வால்மீகியும், கம்பரும், ஆழ்வார்களும் மிக சரளமாக வந்து போகிறார்கள். மிக அற்புதமாக உள்ளது. ஸுந்தர காண்டத்தை ஸ்ரீமதி விஷாகா ஹரி (Srimathy Vishakha Hari) யின் குரலில், இன்னிசையில் ஏற்கனவே கேட்டுள்ளோம். ( இங்கே ) இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொறுத்தவரையில், விஷாகா ஹரி இன்னிசைத் தேன். வேளுக்குடி ஸ்லோக மஹாச...