Skip to main content

Posts

Showing posts with the label sri kapalisvarar

47th Wedding Anniversary

எங்கள் கல்யாணம் 31-01-1971 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த வருஷம் (2018 ஜனவரி) 47 வருஷம் முடிந்து 48ஆவது வருஷம் ஆரம்பித்தது. ஜன 31 ஆம் தேதி (புதன் கிழமை) காலை சீக்கிரமே எழுந்து, குளித்து, 6-45க்கு டாக்ஸியில் மயிலாப்பூர் கிளம்பினோம். அங்கு ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கும், ஸ்வாமிக்கும் அர்ச்சனை செய்தோம். கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. (தைப் பூசம் காரணமோ?). பின்னர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோயிலுக்கு சென்று அம்மனையும் ஸ்வாமியையும் வணங்கி வழிபட்டோம். Kapaliswarar Koil Sri Velleeswarar Koil, Mylapore காலை சிற்றுண்டியை ரத்னா கஃபேயில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். நிறைய அழைப்புகள், செய்திகள். எல்லா உறவினர்களும் வாழ்த்து செய்தி பேசினர். இந்திரா, கணேசன், ரமணி, பட்டு மன்னி ஆகியோருடன் பேசி நமஸ்கரித்தோம். ஸ்வீட் வாங்கி இருந்தோம். அர்ஜுன், அதிதி, சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தோம். இவ்வாறாக, இந்த 47-ஆம் கல்யாண நாள் சிறப்பாக நடந்தேறியது. ராஜப்பா 31-01-2018

மயிலாப்பூரில் பங்குனி உத்ஸவம் - 2017

ஒவ்வொரு ஆண்டும் சிவன் கோயில்களில் பங்குனி மாஸத்தில் உத்ஸவம் நடக்கும். ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் இதற்கு விலக்கல்ல. இந்த வருஷமும் (2017) ஏப்ரல் 1-ஆம் தேதி (பங் 19) விழா ஆரம்பித்தது. அடுத்த நாள் கொடியேற்றம். பின்னர், 4-ஆம் நாள் திருவிழாவாக அதிகார நந்தி ஏப் 4 செவ்வாய் அன்று. நானும் விஜயாவும் சென்றோம். நல்ல கூட்டம் இருந்தும், நன்றாக தரிசித்தோம். காலை 6-45க்குப் போய் 8-45க்கு திரும்பினோம். சங்கீதாவில் இட்லி சாப்பிட்டோம். அடுத்து ஏப்ரல் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்த்திருவிழா. காலை 7-15 க்கு போய் ஆதம் தெருவில் நின்று கற்பகாம்பாளையும், கபாலீஸ்வரரையும் நன்கு தரிஸித்தோம். 8-45க்கு வீடு திரும்பினோம். ஏப்ரல் 9-ஆம் தேதி (ஞாயிறு) பகலில் 63- வர் உத்ஸவம். கூட்டம் மிக அதிகமாக இருக்குமாதலால், போக போவதில்லை

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி இன்று (20 மார்ச்) காலை பாங்கிற்கு (Bank) கிளம்பினோம். நடுவழியில்தான் தெரிந்தது, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அதிகார நந்தி என்பதும், போக்குவரத்து பல இடங்களில் திருப்பி விடப்படுகிறது என்பதும். பஸ்ஸை மந்தவெளி போஸ்ட் ஆஃபீஸ் அருகில் நிறுத்தி விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். தெற்கு மாட வீதி முனையில் (குமரன் கடை அருகில்) பெரிய பந்தல் போட்டு, ஸ்வாமி-அம்மனை அங்கு எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். என்ன அழகான அலங்காரம் ! காண கண் கோடி வேண்டும். இன்று என்ன தவம் பண்ணினோமோ, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வழிபட்டோம். புண்ணியம். நாலு வருஷங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பகம் அவென்யூவில் இருந்த போது, இதே பங்குனியில் விடியற்காலம் கோயில் சென்று ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரனை அதிகார நந்தியில் வணங்கி வழிபட்டோம். இன்றும், கூட்டமான கூட்டம்; திருஞான சம்பந்தருக்கு திருமுலைப் பால் வழங்கிய உத்ஸவமும் இன்று இருந்தபடியால், பல இடங்களில் பக்தர்களுக்கு சூடான பால் கொடுத்தார்கள். நிறைய பெண்மணிகள் கைகளில் தட்டு தட்டாக பக்ஷணங்கள், பழங்கள், புஷ்பம் போன்ற பல சீர்வரிசைகளை ஏந்தி, ம...

ஸ்ரீகபாலீஸ்வரர் திருத்தேர் - மயிலாப்பூர். 2012

மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீச்வரர் திருக்கோயிலில் இந்த வருஷம் பங்குனி உற்சவம் மார்ச் 27_ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. மார்ச் 30 காலை அதிகார நந்தியில் ஸ்வாமி புறப்பாடு. ஏப்ரல் 1_ஆம் தேதி ரிஷப வாஹனம். ஏப்ரல் 3-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 7-30க்கு திருத்தேர். விஜயாவும் நானும் சீக்கிரமே எழுந்து, குளித்து, 7 மணிக்கு மயிலாப்பூர் கிளம்பினோம்.  மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்தோம். உமாவும் வந்தாள். ஆதம் தெரு வழியாகச் சென்று தேரை தரிஸித்தோம். விநாயகர், ஸ்வாமி, அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களையும், ஸ்வாமிகளையும் நன்கு தரிஸித்தோம். ஸ்வாமி தேருக்கு மட்டும் கூட்டம் இருந்தது. விநாயகர் தேர் ஸ்வாமி தேர் ஸ்வாமி தேர் அம்பாள் தேர் முருகன் தேர் தேர்களை தரிஸித்த பின்னர், கோயிலுக்குச் சென்றோம். அம்பாள், ஸ்வாமியை கண்குளிர தரிஸித்தோம். திரும்பும் வழியில், மாமி மெஸ்ஸில் இட்லி சாப்பிட்டோம். நீண்ட நேரம் பஸ்ஸுக்காக மந்தைவெளியில் காக்க வேண்டியிருந்தது. 11 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம். ஏப்ரல் 4-ஆம் தேதி (புதன்) 63...

மயிலாப்பூரில் நாங்கள் 31-1-2012

நேற்று (31 ஜனவரி) எங்கள் [41-வது] திருமண ஆண்டு நாள். மாலை 4-15 க்கு வீட்டிலிருந்து கிளம்பி, மயிலாப்ப்பூர் மசூதி தெருவிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலு க்குச் சென்றோம். ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்திக் கொண்டு தரிஸனம் அளித்தார். அவரையும், ஸீதா சமேத ஸ்ரீ ராமரையும் சேவித்து விட்டு, ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்கு நடந்தோம். ஸ்ரீ அலமேலு தாயார் ஸமேதராக ஸ்ரீநிவாஸப் பெருமாள் இங்கு எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் புன்னகை தவழும் முகத்தோடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்; அவரது அழகில் நம் மனசு கொள்ளை போய்விடுகிறது. மிக அருகில் நின்று பெருமாளை நீண்ட நேரம் சேவித்தோம். 250 வருஷங்களுக்கு முன்னால் முதலில் இங்கு வேதாந்த தேஸிகர் கோயில் மட்டும் தான் இருந்தது; பின்னர் சமீபத்தில் 1924-ல் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் நிறுவப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்ரீ வேதாந்த தேஸிகரின் “உபாஸன தெய்வம்”; மிக சக்தி வாய்ந்தவர். கோயிலில் சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ நரஸிம்ஹர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அடுத்து, ஸ்ரீ ஆதிகேஸவ பெருமாள் கோயில். மிகவும் பழமையானது. 12 ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ பேயாழ்வார் அவதரி...

மயிலாப்பூரில் இன்று ...

இன்று (06 டிசம்பர் 2011) மாலை நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். பஸ் கட்டண உயர்விற்குப் பின்னர் நாங்கள் மயிலாப்பூருக்குச் செல்வது இதுவே முதல் முறை. பஸ் டிக்கெட் ரூ 13.00 ஆக உயர்ந்துள்ளது. இருவர் போய்விட்டு வர ரூ 52.00 ஆகிவிடுகிறது. மயிலாப்பூரில் முதலில் வடக்குமாட வீதி வழியாக கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். கோயிலுக்குச் சென்று ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. கோயிலில் நல்ல கூட்டம். இருப்பினும், ஸ்ரீ கற்பகாம்பாளையும், ஸ்ரீ கபாலீஸ்வரரையும் நன்றாக, கண்குளிர திருப்தியாக தரிஸனம் செய்தோம். இந்தக் கோயிலில் கிடைக்கும் மனநிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. மயிலாப்பூருக்கு இணை கிடையாது. பின்னர் கிரி டிரேடர்ஸுக்கும், மாமி மெஸ்ஸுக்கும் சென்றோம். தெற்கு மாடவீதியில் நுழைந்து சில சாமான்களை வாங்கினோம். பஸ் பிடிக்க போய்க் கொண்டிருக்கும் போது, விஜயாவிற்கு திடீரென தனது 1965-வகுப்பு தோழி (வயது 66) நாகலக்ஷ்மியின் நினைவு வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்த 1965-வகுப்பு “ஸோமஸுந்த்ர கன்யா வித்யாலயா” மாணவிகள் பலர் 40க்கும் மேல் காஞ்சிபுரத்தில் தங்கள் பழைய பள்ளிக்க...