Skip to main content

Posts

Showing posts with the label Kanchipuram

We Went to Kanchipuram

காஞ்சிபுரம் நேற்று (20-09-2017, புதன்கிழமை) காலை 7 மணிக்கு நாங்கள் மூன்று பேர் டாக்ஸியில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 80 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்.  Me, Vijaya, Pattu Manni போகும் வழியில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமிகள் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்று அவரது கோயிலுக்கு சென்றோம். ஸ்வாமிகளின் 1000-வது ஜன்ம தினம் சமீபத்தில் கொண்டாடப்பெற்றது. அழகான கோயில். அடுத்த ஸ்டாப் - காலை உணவு. காஞ்சிபுரத்திற்கு அருகில், பெங்களூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள சரவணா பவன் ஓட்டல். பொங்கல், இட்லி சாப்பிட்டோம். இந்தப் பாதையிலிருந்து இடது புறம் திரும்பும் வீதியில் போய், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிஸித்தோம். ஏகாம்பரேஸ்வரர், முருகன், கைலாசநாதர், காளிகாம்பாள், கச்சபேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்றோம். Gave Rs 3000.00 at Kachabeswarar koil for Annadhanam. இரவு 8-30க்கு வீடு திரும்பினோம். காஞ்சியில் 1008 கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களுக்கும் கூட்டம் வருகிறது; இந்தக் கோய...

Ganesan's Kanchipuram Visit.

GANESAN, brother of Vijaya, completed 80 years on 1 June 2017 and he wished to visit Kanchipuram on this occasion to seek the blessings of Sri Kamakshi Amman there. He, along with his daughter Shobha and her family, and son Ravi with his family 9 came to Chennai on 29th May and stayed at Saligramam.  On 30th they visited Sri Kapaleeswarar Koil Mylapore. On 31st they took rest. On 1st June Thursday, all 9 of them, Kumar Lalita, Vijaya, Arun, Gayathri, Sowmya, Sriram (in Arun's car) left Chennai by 7AM and went to Kanchipuram. There after worshipping at Kamakshi Amman koil, they went to Sri Ekambareswarar koil and to their old school (Pachaippa's school, where their father Sri GN Yegnaswamy Iyer worked). After lunch in a hotel, they returned to Chennai. On Friday, the 2nd June, all the 9 from Mumbai, Indira, Lalita, and Kumar came to our house. Ganesan, Lalita, Indira came by 11 AM and had their lunch here. The rest came at 4-30 PM. We had a gala time. Arun, Gayat...

Get-Together மீண்டும் சந்திப்பு

காஞ்சிபுரத்தில் தங்கள் பழைய ஸ்கூலில் 46 வருஷங்களுக்குப் பிறகு சென்ற 4 டிசம்பர் 2011-ல் சந்தித்த பிறகு, விஜயாவும் அவளது தோழிகளும் டெலிஃபோன் தொடர்பில் இருந்து கொண்டே இருந்தனர். மீண்டும் எல்லாரும் தங்கள் வீட்டில் சந்திக்கலாம் என ஸ்ரீமதி தேவசுந்தரி சொல்ல, அது போலவே சுமார் 20 பேர் அவரது தாம்பரம் வீட்டில் ஃபிப்ரவரி 2ஆம் தேதி [வியாழனன்று] சந்தித்தனர். விஜயா காலை 8-15க்கு கிளம்பி அடையாறு சென்று ஸ்ரீமதி சாந்தியுடன் காரில் சென்றாள். ஒவ்வொருவராக வந்து கலந்து கொண்டனர். மைசூரிலிருந்து ஒருவரும், மதுரையிலிருந்து ஒருவரும் இதற்காகவே சென்னை வந்தது குறிப்பிடத் தக்கது. காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 பேர் வந்தனர். தேவசுந்தரியும் அவரது தங்கை, தம்பியும் தடபுடலாக விருந்து சமைத்தனர். சப்பாத்தி, குருமா, புலவ், ராய்த்தா, தயிர் சாதம், ஐஸ்கிரீம் என இன்னும் பல ஐட்டங்கள் செய்தனர். எல்லாரும் பேசிக்கொண்டு சாப்பிட்ட பின்னர் சாயங்காலம் வீடு/ ஊர் திரும்பினர். ராஜப்பா 0930 3-2-2012

Back to School - After 46 years - The DAY

It was in the air for many weeks; I wrote about it in October 2011. The momentum gathered fast when the HINDU met 5 at Vadapalani and published the meet with a large photo. [ read ] The day was Sunday, the 4th Dec 2011. Vijaya got up by 4-30 AM and left house by 5-45. Arun dropped her at TNagar bus terminus. Boarded the bus at 0610 for Kanchipuram and she reached there by 8-15. Arrived in Sri Kamakshi Amman Koil and waited. Ladies of the 1965-class of Somasundara Kanya Vidyalaya (SSKV) Kanchipuram started arriving, and the next 30 minutes saw over 40 assembling. A few had seen the HINDU article and joined the group. After darshan of the Amman, and an archanai later, they ambled to their old alma mater nearby. It was an emotional meet, seeing one another after 46 years, not able to recognise anyone at the first sight. Time had transformed everyone, from bubbly, bouncing and beautiful young lasses of 16 and 17 years, to matured, grown-up and withered grandmothers of 62 and...

Back to School - After 46 years.

Forty students of SSKV School in Kancheepuram will meet after 46 years on December 4 at their alma mater It's a meeting with a few women from a 40-member group that has planned a reunion after 46 years at their alma mater, Somasundara Kanya Vidyalaya (SSKV) in Kancheepuram, and I arrive 15 minutes late. It's obvious I was not missed. Five grey-haired women, draped in saris, sit misty-eyed recollecting memories. Shanthi shakes her head in disbelief, as she tells V.S. Manonmani, “It's incredible I failed to recognise you — one of my best buddies!” Like a stump sprouting to life at the touch of water, faded memories return powerfully as they discuss their teachers, rivalries and pastimes at SSKV. Y. Vijaya reminds Ambika about their close competition in academics. “Often, just half a mark would separate us,” recalls Vijaya. Ambika nods in agreement. When Shanthi remembers their principal Yashoda Bai, her friends mention the admirable qualities the lady had. “Our SSLC e...

46 வருஷங்களுக்குப் பிறகு ....

ஸ்ரீமதி பிரேமா லக்ஷ்மிநாராயணன், வேலூர் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி, பெங்களூர் ஸ்ரீமதி கோகிலா, நங்கநல்லூர், சென்னை ஸ்ரீமதி சந்திரிகா, காஞ்சிபுரம் ஸ்ரீமதி மனோன்மணி,போரூர், சென்னை ஸ்ரீமதி அம்பிகா, வடபழனி, சென்னை ஸ்ரீமதி (டாக்டர்) மல்லிகேஸ்வரி, காஞ்சிபுரம். இவர்கள் ஏழு பேருக்குள்ளும் ஒரு ஒற்றுமை உண்டு; முதலில் இந்த ஏழு பேரும் யார்? இவர்கள் யாவருமே அறுபது வயதை தாண்டியவர்கள்; பேரன், பேத்திகளோடு இருப்பவர்கள். ஒற்றுமை இது மட்டுமல்ல. யாவருமே காஞ்சிபுரம் ஸோமசுந்தர கன்யா வித்யாலயா வில் 11-வது (எஸ் எஸ் எல் ஸி)  வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஒற்றுமை இது மட்டுமல்ல. யாவருமே விஜயா வுடன் ஒன்றாகப் படித்த மாணவிகள் / தோழிகள். இதுதான் முக்கியமான ஒற்றுமை. 11-வது முடித்ததும் (1965) யாவரும் பிரிந்து விட்டனர். தொடர்பே இற்று விட்டது. நாங்கள் 2001-ல் சென்னை வந்ததும், விஜயா ஒருமுறை காஞ்சிபுரம் சென்றாள். அங்கு, பிரேமா என்னும் தோழி நினைவுக்கு வர அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.  பிரேமாவின் அம்மாதான் இருப்பார், அவரிடம் பிரேமாவின் அட்ரஸை கேட்கலாம் என சென்ற விஜயா அங்கு பிரேமாவையே அதிர்ஷ்டவச...

காஞ்சிபுரம் - Kanchipuram Dec 2010

சென்ற வாரம் 2010, டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை யன்று நான், விஜயா, அஷோக், நீரஜா ஆகிய நால்வரும் காஞ்சிபுரம் சென்றோம். காலை 6-45க்கு அர்விந்த் காரில் பெஸண்ட்நகரிலிருந்து கிளம்பினோம். போரூர், ஸ்ரீபெரும்பூதூர் வழியாக சென்றோம். சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்தில் (காஞ்சியிலிருந்து 9 கிமீ) உள்ள ”வேடல்” என்ற கிராமத்தில்  முதலில் காரை நிறுத்தி அங்கு சங்கர மடத்தினர் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் சில பகுதிகளைப் -பார்த்தோம். இது சென்னை-பெங்களூர் சாலையில் சுமார் 68-வது கிமீட்டரில் L & T Factory (Blue color building) அடுத்து இருக்கிறது. சிவன் சிலையை ரோட்டிலிருந்தே பார்க்கலாம். சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார். இதனை 18/10/2010 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணித்தார்.   இந்த சிவன் பீடத்தின் அடியில் தஞ்சையில் ...

காஞ்சிபுரம் சென்றோம் ... Kanchipuram 2010

சென்ற ஞாயிறு (ஜூன் 6) நாங்கள் காஞ்சிபுரம் சென்றோம். நான், விஜயா, சுகவனம் ஆகிய மூவர் மட்டும் அர்விந்த் காரில் ஓட்டுனர் வைத்துக் கொண்டு சென்றோம். காலை 7-15 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றோம். எங்கள்  பெரியப்பாவின் கொள்ளுப் பேத்திக்கு காஞ்சியில் 7-ஆம் தேதி கல்யாணம். முதலில், சரோஜாவும், அத்திம்பேரும் வருவதாக இருந்தனர். சரோஜாவிற்கு காலில் அடி பட்டதால், அவர்கள் வரவில்லை. பெரியப்பா சாம்பமூர்த்தியின் 4 பிள்ளைகளில் மூத்தவர் வீரராகவன; இவரது மூத்த மகன் சுப்ரமணியத்தின் (மணி) மகளுக்கு கல்யாணம். கல்யாணம் தவிர நிறைய கோயில்கள் பார்த்து தரிஸிப்பதுதான் எங்கள் காஞ்சி பயணத்தின் முக்கிய நோக்கம். 6ஆம் தேதி காலை காஞ்சியில் இட்லி-பொங்கல்-வடை சாப்பிட்டு விட்டு, நேராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். பல்லவர்களால் 1053ல் கட்டப்பெற்ற புராதனக் கோயில் இது. பெருந்தேவி தாயாருடன் ஸ்ரீவரதராஜப் பெருமான் இருக்கிறார். மிகப் பெரிய கோயில். பல இடங்களில் நிறையப் படிகள் ஏறி, இறங்கவேண்டும். இங்குதான் தங்கப் பல்லி,  வெள்ளிப் பல்லி உள்ளன. ஸ...

காஞ்சிபுரம் சென்றோம் Kanchipuram

KANCHIPURAM ஜூன் 4, 2009 காலை 0715க்கு, நான், விஜயா, கணேசன் ஆகிய மூவரும் ஒரு call taxi-யில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். இந்திராவும் வருவதாக இருந்தது, கடைசி நிமிஷத்தில் வர இயலாமற் போயிற்று. கணேசன் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் காஞ்சி செல்வது வழக்கம். நான்தான் நீண்ட வருஷங்களுக்குப் பிறகு செல்கிறேன். போரூர் ஸ்ரீபெரும்பூதூர் வழியாக காஞ்சி சென்றோம்; ஒன்றரை மணி நேரப் பயணம். முதலில், ஸ்ரீராமா கஃபேயில் இட்லி, தோசை சாப்பிட்டோம்; இந்த ஹோட்டல் 65 வருஷங்களாக் இருக்கும் புராதனமான ஹோட்டல். பின்னர், ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலிற்குப் பக்கத்தில்தான் விஜயாவின் வீடு இருந்ததது. எங்கள் கல்யாணம் (31-01-1971) இந்தக்கோயிலின் அருகிலுள்ள ராஜகோபால் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கணேசனும், விஜயாவும் 45-50 வருஷங்கள் பின்னோக்கிச் சென்று பழைய இனிய நினைவுகளில் மூழ்கி விட்டனர். பின்பு, விஜயா படித்த Sri Somasundara Kanya Vidhyalaya (SSKV) ஸ்கூலிற்கு சென்றோம். இந்த SSKV ஸ்கூலில் இந்திரா, காமாக்ஷி, விஜயா, லலிதா ஆகிய நால்வரும் படித்தனர். விஜயா மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள். அ...