ஸ்ரீமதி விஷாகா ஹரியை (Smt VISHAKHA HARI) யாவரும் அறிவீர்கள். ஸீதா கல்யாணம் , ஸுந்தர காண்டம் , ப்ரஹ்லாத சரித்ரம் ஆகியவைகளுக்கு அடுத்து தற்போது இவர் “ஸ்ரீ புரந்தரதாசர் சரித்ரம்” என்னும் கதாகாலட்க்ஷேபத்தை DVD வடிவில் கொடுத்துள்ளார். ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கே உரித்தான அந்த இனிமைக் குரலில் ஸ்ரீ புரந்தரதாசரின் சரித்திரத்தை பாட்டாகவும் வசனமாகவும் அளித்துள்ளார். அருமையாக உள்ளது. பாண்டுரங்க விட்டல் மீதான பக்தி இன்னும் சுவை சேர்க்கிறது. கர்னாடக சங்கீதத்தின் “பிதாமகர்” என்று போற்றப்படுபவர் ஸ்ரீ புரந்தரதாசர். இவர் 4 லக்ஷத்திற்கும் அதிகமாக ஸ்வராவளிகள், ஜண்டைவரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள், கீர்த்தனைகள் ஆகியவைகளை இயற்றியிருக்கிறார். மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூரிலுள்ள, ஸ்ரீ பாண்டுரங்கனை (விட்டலை) இவர் துதித்து நாமசங்கீர்த்தனம் பண்ணியிருப்பது மிக விசேஷமானது. பெல்லாரி ஜில்லாவில் ஹம்பிக்கு அருகில் புரந்தரகாட் என்னும் சிற்றூரில் வரதப்பா நாயக்கர் - கமலாம்பாள் தமபதியருக்கு சீனிவாச நாயக்கனாக இவர் 1484ல் பிறந்தார். நிறைய சங்கீத ஞானமும், மொழியறிவும் கொண்டவர். லக்ஷ்மிபாய் (சரஸ்வதிபாய்??) என்பவரை மணந்தார்....