Skip to main content

Posts

Showing posts with the label Ayodya Kandam

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - 3வது பகுதி

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினம்தோறும் காலை 06:30 க்கு ராமாயணம் உபன்யாஸம் செய்து வருகிறார். 23/02/2013 அன்று நான் அயோத்யா காண்டம் 64வது ஸர்கம் எழுதினேன். அதன் தொடர்ச்சி. துக்கம் தாளாமல் தசரத மஹாராஜா இறந்து போகிறார். செய்தி கேட்ட கௌஸல்யா தேவி அழுது அரற்றி கைகேயியை திட்டுகிறாள். அரசன் இல்லாமல் ஒரு நாடு இருக்கக் கூடாது என சொல்லி, வஸிஷ்டர் ஒரு புதிய அரசனிற்கு முடிசூட்ட எண்ணுகிறார். பரதனை கூட்டி வர ஆட்களை அனுப்புகிறார் [ஸர்கம் 65 - 68] அவர் அனுப்பிய ஆட்களும் பரதன் இருப்பிடத்துக்கு செல்கிறார்கள். கேகேய ராஜாவிடம் பரதனை அனுப்புமாறு விண்ணப்பிக்கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். பரதனும் அயோத்யா செல்கிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து அவன் மிகவும் துக்கப்படுகிறான். [ 69 - 72 ] தன அம்மா கைகேயியை திட்டுகிறான். ராமன் தான் ராஜா, நான் அவனை கூட்டி வருவேன் என சொல்கிறான். தந்தை தசரதனுக்கு சரயு நதி தீரத்தில் இறுதி சடங்குகளை செவ்வனே செய்து முடிக்கிறான். {72 -76] பட்டம் வேண்டாம் என மறுத்து விட்டு, ராமனை கூட்டி வர சுமந்திரனுடனும் சேனைகளுடனும் காடு நோக்கி புறப்படுகிறான். சேனைகள...

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம்

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - பகுதி 2 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீ ராமாயண உபன்யாஸத்தை வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2012-ஆம் வருஷம் மார்ச் 31ஆம் தேதியன்று சொல்ல ஆரம்பித்தார். பால காண்டத்தை முடித்து, அயோத்யா காண்டம் சொல்லி வருகிறார். இதன் முதல் பகுதியை 10 டிஸம்பர் 2012 அன்று எழுதினேன். 2-வது பகுதி இது : ஸ்ரீராமரும், ஸீதையும், லக்ஷ்மணனும் காட்டிற்குப் போக தயாராகி விட்டதை அப்போது பார்த்தோம் ஸர்கம் 2 ஸ்லோகம் 31 - இனி - ஜனக மஹாராஜா அன்புடன் அளித்த தெய்வீக வில்,அம்பு, கத்திகளை எடுத்து வர லக்ஷ்மணனை பணிக்கிறான். வேத விற்பன்னர்களிடம் விடைபெற்றுக் கொள்கிறான். அவர்களுக்கு ஏராளமான பசுக்களை தானம் அளிக்கிறான்; அவர்களும் அவனை வாழ்த்தி வழியனுப்புகிறார்கள். தந்தை தஸரதனிடம் விடை பெற அங்கு செல்கிறான். அந்த ஒரு இரவாவது தன்னுடன் தங்குமாறு தசரதன் கேட்க, மறுக்கிறான். ராமன் புறப்பட, தசரதன் மூர்ச்சையாகிறான் (2:34) மரவுரிகளை அணிந்து கொண்டு புறப்படுகிறார்கள். கைகேயி கொஞ்சம் கூட மனம் இரங்கவில்லை; தசரதனும், கௌஸல்யாவும் மற்ற ராணிகளும் அழுகிறார்கள். சுமந்திரன் தேர் கொண்டு வருகிறான். க...

Srimath Ramayana AYODYA KANDAM

அயோத்யா காண்டம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ணி வருவது தெரிந்ததே. இன்று (10-12-2012) 179வது உபன்யாஸம் செய்தார்; அயோத்யா காண்டம் - ஸ்ரீ ராமபிரான் காட்டிற்கு போகும் படலம்/ இந்த காண்டத்தில் ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளை விவரிக்கிறது. பின்னர் மந்தரையின் வார்த்தைகளை கேட்டு மயங்கிய கைகேயி அரசன் தஸரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்கிறாள். தன் மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருஷங்களுக்கு காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே அந்த இரண்டு வரங்கள். முதலில் மறுத்த அரசன் பின்னர் ஒத்துக் கொண்டு மூர்ச்சையாகி விடுகிறான். ராமனை அழைத்து இந்த வரங்களைப் பற்றி தெரிவிக்கிறாள். எந்த வித வாட்டமும் இல்லாமல் ராமன் காடு செல்ல ஏற்றுக் கொண்டு தன் தாய் கௌஸல்யாவிடம், தம்பி லக்ஷ்மணன், மனைவி ஸீதாவென எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு காடு செல்ல தயாராகி விட்டான். இனி விவரமாக, செய்தியைக் கேட்டதும் கௌஸல்யா மூர்ச்சையாகி கீழே விழுகிறாள்; மூர்ச்சை தெளிந்ததும் சோகமாகி விடுகிறாள் (2:20) லக்ஷ்மணன் மிக கோபமாக பேச ஆரம்பிக்கிறான்...