Skip to main content

Posts

Showing posts with the label Sri Rama Jananam

ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக ஸமாஜத்தில் இந்த 2011 மார்ச் 29-30-31 ஆகிய மூன்று தினங்கள் தினமும் மாலை 6-30க்கு உபன்யாஸங்கள் நிகழ்த்தினார். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு :: “ ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள்” வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்திற்கு நாரதர் வந்தார்; அவரிடம் ஒரு பதினாறு கல்யாண குணங்களைப் பட்டியலிட்டு, இந்த 16 குணங்களும் ஒருவனிடத்தில் ஒரே சமயத்தில் இருக்குமா, அப்படியென்றால் யார் அந்த மனிதன் என்று சொல்ல முடியுமா என வால்மீகி கேட்டார். ஒரே வார்த்தையில் “ஸ்ரீ ராமன்” என நாரதர் பதிலளித்தார். இந்த 16 குணங்களையும் வேளுக்குடி தனக்கே உரித்தான தெளிய தமிழில் சலசலத்து ஓடும்  காவிரியாக, பொங்கிப் பெருகும் கங்கையாக - வால்மீகியையும், கம்பரையும், ஆழ்வார்களையும் நம் கண் முன்னே நிறுத்தி விளக்கிச் சொன்னார். மிக அருமையாக இருந்தது. உபன்யாஸம் பண்ணிய 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ராஜப்பா 01-04-2011 காலை 1000 மணி

ஸ்ரீமத் பாகவதம் - 339

ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸத்தின் 339-வது பகுதி இன்று (28 ஃபிப்ரவரி 2011) நடந்தது. இன்று ஸ்ரீராமர் ஜனனம் சொல்லப்பட்டது. இக்ஷ்வாகு வம்ஸத்தில் பகீரதனுக்குப் பின்னர் வந்த அஜர் என்பவருக்கு தசரதன் பிறந்தார். ரிஷ்யசிருங்கர் மூலமாக தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பாயஸக் குடம் வந்தது. அந்த பாயஸத்தை தசரதன் இரண்டாகப் பிரித்து  ஒரு 1/2 பாகத்தை கௌஸல்யாவிற்கு கொடுத்தார்; மீதமிருந்த 1/2 பாகத்தை மீண்டும் இரண்டாக பிரித்து (அதாவது மொத்தத்தில் 1/4 பாகத்தை) கைகேயிக்கும், மீதமிருந்த 1/4 பாகத்தை இரண்டாக பிரித்து (1/8 பாகம்)  இரண்டையும் ஸுமித்ரைக்கும் கொடுத்தார். கௌஸல்யாவிற்கு ஸ்ரீராமரும், கைகேயிக்கு பரதனும், ஸுமித்ரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர். குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வந்த வஸிஷ்டர் இரண்டு குழந்தைகள் (லக்ஷ்மணன், சத்ருக்னன்) அழுவதைக் கண்டார்.  ராமன் பக்கத்தில் தான் இல்லையென்று லக்ஷ்மணனும், பரதன் பக்கத்தில் தான் இல்லையென்று சத்ருக்னனும் அழுதனராம். ராமன் இருந்த அதே தொட்டிலில் லக்ஷ்மணனையும், பரதன் இருந்த தொட்டிலில் சத்ருக்னனையும் விட்டபி...