Skip to main content

Posts

Showing posts from March, 2012

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்.

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-லிருந்து 6-45 வரை உபந்யாஸம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் 18-ஜனவரி-2007 வியாழனன்று பகவத்கீதை சொல்ல துவங்கினார். மொத்தம் 735 உபந்யாஸம் செய்தார்; இறுதியில், 06-நவம்பர்-2009 அன்று கீதை நிறைவு பெற்றது. 09-நவம்பர்-2009 அன்று ஸ்ரீமத் பாகவத புராணம் ஆரம்பித்தார். 12 ஸ்கந்தங்கள் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமன் நாராயணனின் 10-அவதாரங்களையும், மற்றும் பல பெருமைகளையும் விளக்குகிறது. முக்கியமாக கண்ணனின் அவதார பெருமைகளை சொல்லுகிறது (10-வது ஸ்கந்தம்). 621 பகுதிகளுக்குப் பிறகு, இன்று (30-03-2012, வெள்ளிக்கிழமை) ஸ்ரீமத் பாகவதமும் நிறைவுற்றது. 735 + 621 = 1326 நாட்கள். 5 வருஷங்களுக்கும் மேலாக (18-01-2007 முதல் 30-03-2012 வரை) இந்த உபன்யாஸங்களை நானும் விஜயாவும் ஒரு நாள் தவறாமல், தினமும் குளித்து, கேட்டு வருகிறோம். 18 ஜனவ்ரி 2008-ல் நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்: “சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்

ஸ்ரீமத் பாகவதம் - 12வது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதத்தின் கடைசியும், 12-வதுமான ஸ்கந்தம் இது. மொத்தம் 13 அத்தியாயங்கள் கொண்டது. ஸ்ரீஸுகதேவ கோஸ்வாமி இதில் கலியுகத்தில் தோன்றப் போகும் அரசர்களையும் அவர்கலது வம்ஸங்களையும் பற்றி பரீக்ஷீத் மஹாராஜாவிற்கு கூறுகிறார். ஸ்கந்தம் 12 - அத்தியாயம் 1-ல் 41 ஸ்லோகங்கள் உள்ளன. 12:02 கலியுகத்தின் தீமைகளை விளக்குகிறார். கலியுகத்தின் அழிவில் பகவான் கல்கி அவதாரம் எடுத்து தீயவர்களை அழிப்பார் என கூறுகிறார். மொத்தம் 44 ஸ்லோகங்கள் உள்ளன. 12:03 மொத்தம் 52 ஸ்லோகங்கள். கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே மோக்ஷம் கிட்டும் என விளக்கப்படுகிறது. முத்ன்முதலில் ஸத்ய யுகம் இருந்தது. அப்போது மக்கள் இரக்க குணத்தோடும், அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர். The people of Satya yuga are for the most part self-satisfied, merciful, friendly to all, peaceful, sober and tolerant. They take their pleasure from within, see all things equally and always endeavor diligently for spiritual perfection.   In Treta-Yuga each leg of religion is gradually reduced by one quarter by the influence

ஸ்ரீமத் பாகவதம் - 11வது ஸ்கந்தம் (2)

11-வது ஸ்கந்தம்   17-11-2011 அன்று காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது. முதல் பகுதி ஏற்கனவே 29 ஜனவரியன்று எழுதினேன். அதன் தொடர்ச்சி ... 11:06 முதல் 11:14 வரை பகவான் உத்தவருக்கு அருளியவை விளக்கப் படுகின்றன. 11:14, 11:15, 11:16 யோக முறைகளை உத்தவருக்கு பகவான் சொல்லுகிறார். 11:17, 11:18 வர்ணாசிரமம விளக்கப்படுகிறது. 11:24ல் சாங்கிய யோகம் சொல்லப்படுகிறது. 11:27ல் க்ரிய யோகம் [DEITY WORSHIP] உத்தவருக்கு சொல்லப்படுகிறது. The details of the worshiping process are as follows: The devotee should bathe both physically and by chanting mantras, and then he should perform the utterance of Gāyatrī at the prescribed juncture of the day. He should arrange a seat facing either east or north, or else directly facing the Deity, and should bathe and clean the Deity. Then he should present clothing and ornaments, sprinkle water on the vessels and other paraphernalia to be used in the worship, and offer water for bathing the Deity's feet, arghya, water for washing His mouth, fragr

ஸ்ரீமத் பாகவதம் - 600-வது பகுதி

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (01 மார்ச் 2012) தனது 600-வது உபந்யாஸத்தை செய்தார். சென்ற சில ஆண்டுகளாக ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத புராணத்தை பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30க்கு சொல்லி வருகிறார். இன்று 01-03-2012 வியாழன் இதன் தொடர்ச்சியாக 600-வது உபந்யாஸத்தை செய்தார். ஸ்கந்தம் 11, அத்தியாயம் 30, ஸ்லோகம் 28. ராஜப்பா 01 மார்ச் 2012 காலை 8 மணி பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது.