Skip to main content

Posts

Showing posts with the label Thanga Ther

தங்கத்தேர் இழுத்தோம் - 2011

இன்று (14-01-2011) வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலில் நாங்கள் தங்கத்தேர் இழுத்தோம். இது அருண்-காயத்ரியின் வேண்டுதல். 6-45க்கு நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சதீஷ் ஆகியோர் காரில் கோயிலுக்கு. கிளம்பினோம். மருந்தீஸ்வரர் - திரிபுரசுந்தரி அம்மன் கோயில் பழமையான கோயில். அங்கு, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரும், பாலு மாமா, மாமி, ரமணா, அர்ச்சனா, அவர்கள் குழந்தை, மீனாவின் குழந்தை, அவள் மாமனார், மாமியார் (மீனா வரவில்லை), காயத்ரியின் இரண்டு சித்தப்பாக்கள், கணேஷ், சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, சந்தரின் அம்மா, சரோஜா, ராஜி மாமி, கிரிஜா மாமி (இவர்கள் இருவரும் சரோஜாவின் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள்) ஆகியோர் வந்தனர். 7-30 மணிக்கு தேர் ஆயத்தமானது. சுக்கிரவார அம்மனை தேரில் ஏற்றி கற்பூர தீபாராதனைக்கு பின் தேர் இழுத்தல் துவங்கியது. மொத்தம் 4 உபயதாரர்கள். ஒவ்வொருவரும் 1/4 சுற்று இழுக்கவேண்டும்; அருண் இரண்டாவதாக இழுத்தான்; நாங்களும் சேர்ந்து கொண்டோம். இழுத்து முடிந்து, அர்ச்சனை, தீபாராதனைக்கு பின்னர் கேஸரி பிரஸாதம் வழங்கப்பட்டது. அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்ட பின்னர் எல்லா...

தங்கத் தேர் Golden Chariot

தங்கத் தேர் Golden Chariot காயத்ரிக்காக அவள் பெற்றோர் வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொண்டிருந்தனர். சென்ற மார்ச் மாசம் 27 ஆம் தேதியன்று நாள் குறிக்கப்பட்டு, அதற்கான பணமும் (ரூ. 1000/-) செலுத்தப்பட்டது. நான், விஜயா, சதீஷ் ஆகிய மூவரும் அன்று பகல் 4.00 மணிக்கு அருண் வீட்டிற்குப் போனோம். அடுத்த அரைமணிக்குள் குழந்தை அதிதி அங்கு வந்தாள் (அவளை விட்டுவிட்டு க்ருத்திகா வெளி வேலையாக போய்விட்டாள்). 5 பெரியவர்கள், 3 குழந்தைகள் ஆகியோர் அருண் காரில் கிளம்பி, 6 மணி சுமாருக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஏற்கனவே காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர் வந்திருந்தனர். 7 மணிக்கு தேர் தயாராகி, கற்பூர தீபாராதனை ஆயிற்று. தேர் இழுக்க நாங்கள்தான் முதல் குடும்பம். எல்லாரும் சேர்ந்து தேர் இழுத்தோம். ஒரு சுற்று இழுத்தோம். மண்டபத்தில் உட்கார்ந்து, புளியோதரை, சக்கரைப்பொங்கல் பிரசாதம் சாப்பிட்ட பிறகு, அவரவர்கள் வீடு திரும்பினோம். வடபழனியில் கார் நிறுத்திய இடத்திலேயே குழந்தைகள் ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம் மூவரும் சாப்பிட்டனர். தேர் இழுத்தது ஒரு சுக அனுபவம். முன்னதாக 2003 ...