Skip to main content

Posts

Showing posts from December, 2007

ஸீதா கல்யாண வைபோகமே - Vishakha Hari

"ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே " - இந்த பாடலுடன் விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) "சீதா கல்யாணம்" உபன்யாசம் நிறைவடைகிறது. இரண்டு VCDக்கள்.சுமார் 3 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரு தெய்வீக அனுபவம். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டோம். We both were transported to another world, a pristine and sublime world. வால்மீகியும், துளசிதாஸரும், கம்பரும், அருணாச்சல கவிராயரும் ("யாரோ, இவர் யாரோ") மிக முக்கியமாக தியாகராஜரும் விஷாகாவின் இந்த உபன்யாசத்தில் தவழ்ந்து வருகிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகள் தேனாக ஒலிக்கின்றன. என்னை விட விஜயா மிகவும் அனுபவித்தாள். பல கீர்த்தனைகளை கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். அயோத்யாவிற்கு மகரிஷி விஸ்வாமித்திரர் வருவதில் ஆரம்பித்து, அவர் ஸ்ரீராமரை அசுர வதத்திற்கு (யக்ஞத்தை காப்பதற்கு) அழைத்துச் செல்வது, பின்னர் மிதிலாபுரிக்கு செல்வது, இடையில் அகல்யைக்கு சாப விமோசனம் தருவது, மிதிலையில் சிவ தனுஷை முறிப்பது, ஸீதா கல்யாணம் --- என உபன்யாசம் செல்கிறது. கேட்ட கதைதான், ஆனாலும் அந்த அனுபவம் சொல்லி விளக

மீண்டும் மயிலாப்பூர் Mylapore

இதுக்கு முன்னாலேயே சொல்லிட்டேன் - மயிலாப்பூரை, கோயில் மாடவீதிகளை, கிரி டிரேடிங்ஸ் (Giri Tradings), பத்தி திரும்ப திரும்ப எழுத, எனக்கு அலுக்காது, எப்பவும் சலிக்காதுன்னு. நேற்று (30 டிசம்பர் 2007) மாலையும் சென்றேன் (விஜயாவுடன்). வாசுவிற்கு ஒரு சில சாமான்கள் தேவைப்பட்டதால் அவற்றை வாங்கலாம் எனப் போனோம். நேற்று என்ன விசேஷம்னு தெரியலே, வெள்ளீஸ்வரர் கோயிலிலே ஒரே கூட்டம். வழக்கமான மார்கழி மாச கூட்டம்தானோ? அங்கிருந்து இடது பக்கம் திரும்பி, ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாகப் போனோம். ரெண்டு மாசங்களுக்கு முன்பு இடியால் சேதமுற்ற கோபுரத்தை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது - கோபுரத்தை தென்னங்கீற்றுகளால் மூடியிருந்தார்கள். கோயிலின் உள்ளே போகவில்லை - போலாமா, கூடாதா எனக் குழப்பம். "கோபுர தரிசனம், கோடி பாப விமோசனம்" என அமைதிப்படுத்திக் கொண்டு, கிரி கடையில் நுழைந்தோம். இந்தக் கடையில் நுழையும் ஒவ்வொரு முறையும் ஆனந்தம், பரவசம்தான். 2-ம் மாடியில் பாட்டு CDக்களை கேட்க, வாங்க ஒரே கூட்டம். ஸ்ரீமதி விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) உபன்யாச CD / DVDக்களான "சுந்தர காண்டம்" மற்றும்

வியப்பும் - திகைப்பும்

முதலில், வியப்பு . இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கறிகாய் கடையில், ஒரு இளைஞன் (25-28 வயசு) கடைக்காரரை கேட்டான் - " புதினா என்ன விலைங்க?" கடைக்காரரின் பதில்: "தம்பி, நீ கையிலே வெச்சிருக்கிறது கொத்தமல்லி - புதினா இல்லே" கொத்தமல்லிக்கும் புதினாவிற்கும் வித்தியாசம் தெரியாதா, ஒரு 26 வயசு இளைஞனுக்கு!!?? எனக்கு ஒரே வியப்பு. அடுத்து, திகைப்பு . இன்று (24 டிச 2007) காலை நான் ஒரு மளிகைக் கடைக்குச் சென்று, கொத்துக்கடலை வேண்டுமென்று கேட்டேன். கடைக்கார ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை - முழித்தான். " என்ன சார் வேணும் ?" திரும்பவும் கேட்டான். " கொத்துக்கடலை " - இது நான், அழுத்தமாக. மீண்டும் அதே முழிப்பு. என்ன சொல்லிக் கேட்பது என்றே எனக்குப் புரியவில்லை - அடிச்சி விட்டேன் "சன்னா" வென்று. தமிழ்நாட்டில் ஹிந்தியா? கடைக்கார ஆளின் முகத்தில் 500W பல்பு எரிந்தது. " ஓ, சன்னாவா, அப்படி சொல்லுங்க " என்று 250 கி "கொத்துக்கடலை"யை கொடுத்தான். ஹிந்தி எதிர்ப்பு 1965-ல் நடந்ததாமே, அப்படியா? எனக்கு ஒரே திகைப்பு. ராஜப்பா 12:

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் உரித்த சின்ன வெங்காயம் - 10 - 12 கறிவேப்பிலை - கொஞ்சம் உரித்த பூண்டு - 10 - 12 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 1/2 டீஸ்பூன் சிகப்பு மிளகாய் - 7 எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் - 2 டேபிள் ஸ்பூன்; தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை 1. குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டை இளஞ் சிவப்பாக வதக்கவும். 2. அதிலேயே சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். 3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும். 4. இளஞ் சிவப்பாக மாறியதும், 4 கப் தண்ணீரும், உப்பும் சேர்க்கவும். 5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அலம்பிய துவரம் பருப்பையும், அரிசியையும் சேர்க்கவும். 6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும். 7. அனலைக் குறைத்து, குக்கரின் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும். 8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும். சமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செ

மாதங்களில் மார்கழி - 2007

மாதங்களில் நான் மார்கழி - என்றான் கண்ணன். மார்கழி பிறந்தாலே நினைவுக்கு வருவது திருப்பாவை - திருவெம்பாவை தான். (மூடநெய் பெய்து முழங்கை வழிவார - என்று சுடச்சுட வெண்பொங்கலும் கூட!!!!) 2007 ஜனவரி துவங்கி இதுநாள் வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் "பகவத் கீதை" உபன்யாஸத்தை நானும் விஜயாவும் தவறாமல் கேட்டு வருகிறோம். ஸ்ரீ உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் மிக நேர்த்தியாக உபன்யாஸம் செய்கிறார். தெளிவான ஆற்று நீர் ஓட்டம்போல, தங்கு தடையற்ற இனிய தமிழ். பொதிகையில் காலை 6-30 முதல் 6-45 வரை ஒளிபரப்பாகிறது. மார்கழி 1- ஆம் தேதி முதல், திருப்பாவை - திருவெம்பாவையும் ஒளிபரப்பு ஆகிறது, காலை 6 மணிக்கே. எனவே, நான் காலை 5-15க்கே எழுந்து, குளித்து (!!), 5-45க்கு திருப்பாவை படிக்க ஆரம்பித்து விடுகிறேன். விடியலுக்குமுன் குளிப்பதே பரம ஆனந்தம். கீதை உபன்யாஸத்தைக் கேட்டு முடித்த பிறகே மற்ற வேலைகள் ஆரம்பம். சுடச்சுட வெண்பொங்கல் (தொன்னையில்) ?? அது இன்னும் கனவாகவே உள்ளது. ராஜப்பா 12-00 19-12-2007 Velukkudi Krishnan, Bhagavad Gita

சௌ. கிரிஜா

கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம ஐயர் - நாகலக்ஷ்மி தம்பதியர்க்கு, 5-வது மகளாக கிரிஜா சென்னையில் பிறந்தாள். கிரிஜாவிற்கு சபீதா, சாவித்திரி, ரமணா, பாபு என்று 4 அக்காக்கள் உண்டு. கிரிஜாவின் தகப்பனார் நரசிம்ம ஐயர் ஒரு businessman ஆக இருந்தார். கிரிஜா மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்துவிட்டாள். தாய்க்கு. பின்னர், கிரிஜாவை வளர்த்து, பெரியவளாக்கி, திருமணம் செய்து ஒரு மனுஷியாக்கிய பெருங்கடமையை அவளது அக்காக்கள், குறிப்பாக ரமணா மற்றும் பாபுவே செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை "கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி"யில் தனது பள்ளிப்படிப்பை முடித்த கிரிஜா Queen Mary's College-ல் PUC படித்தாள். Mint-ல் உள்ள Govt Arts College-ல் 1975-ம் வருஷம் BA டிகிரி வாங்கினாள். படித்த கையோடு, ஒரு தனியார் அலுவலகத்தில் ஸ்டெனோவாக ஆறு மாதங்கள் வேலை செய்தாள். 1975-ம் வருஷம் டிசம்பர் 12 ஆம் தேதியன்று, கிரிஜாவிற்கும், நமது சுகவனத்திற்கும் திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நிகழ்ந்தது. இவர்களது திருமண வாழ்க்கை சென்னை திருவல்லிக்கேணியில் துவங்கியது. மகிழ்ச்சியின் அடையாளங்களாக முதலில் 1976 அக்டோபரில் சுதாவும்,