Skip to main content

Posts

Showing posts from February, 2013

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம்

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - பகுதி 2 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீ ராமாயண உபன்யாஸத்தை வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2012-ஆம் வருஷம் மார்ச் 31ஆம் தேதியன்று சொல்ல ஆரம்பித்தார். பால காண்டத்தை முடித்து, அயோத்யா காண்டம் சொல்லி வருகிறார். இதன் முதல் பகுதியை 10 டிஸம்பர் 2012 அன்று எழுதினேன். 2-வது பகுதி இது : ஸ்ரீராமரும், ஸீதையும், லக்ஷ்மணனும் காட்டிற்குப் போக தயாராகி விட்டதை அப்போது பார்த்தோம் ஸர்கம் 2 ஸ்லோகம் 31 - இனி - ஜனக மஹாராஜா அன்புடன் அளித்த தெய்வீக வில்,அம்பு, கத்திகளை எடுத்து வர லக்ஷ்மணனை பணிக்கிறான். வேத விற்பன்னர்களிடம் விடைபெற்றுக் கொள்கிறான். அவர்களுக்கு ஏராளமான பசுக்களை தானம் அளிக்கிறான்; அவர்களும் அவனை வாழ்த்தி வழியனுப்புகிறார்கள். தந்தை தஸரதனிடம் விடை பெற அங்கு செல்கிறான். அந்த ஒரு இரவாவது தன்னுடன் தங்குமாறு தசரதன் கேட்க, மறுக்கிறான். ராமன் புறப்பட, தசரதன் மூர்ச்சையாகிறான் (2:34) மரவுரிகளை அணிந்து கொண்டு புறப்படுகிறார்கள். கைகேயி கொஞ்சம் கூட மனம் இரங்கவில்லை; தசரதனும், கௌஸல்யாவும் மற்ற ராணிகளும் அழுகிறார்கள். சுமந்திரன் தேர் கொண்டு வருகிறான். க