Skip to main content

Posts

Showing posts with the label Amma

HELP OTHERS

HELP OTHERS நேற்று நான் எழுதியதில் சாராம்சம் உருளைக்கிழங்கு பொடிமாஸ் - சின்ன வெங்காயம் சாம்பார் அல்ல. அது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே. பதில் எழுதும்போது பலரும் கிழங்கிற்கும், வெங்காயத்துக்கும் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அது தப்பு என சொல்ல மாட்டேன். ”அந்த” நாட்களில் பலருடைய குடும்பங்கள் எவ்வளவு ஏழ்மையில் இருந்தன; அப்படி இருந்தும் எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தோம் என்பதுதான் சாராம்சம். உதாரணத்திற்கு ”ஜிஆர்எஸ் - சம்பூரணம் அம்மாள்” குடும்பத்தையே எடுத்து கொள்கிறேன். இதுதான் பல குடும்பங்களிலும் இருந்தது. ஜிஆர் எஸ் 1956-ல் வேலை ஓய்வு பெற்றார். போஸ்ட் மாஸ்டராக என்ன சம்பளம் கிடைத்திருக்கும்? (நான் 1963-ல் புகழ்பெற்ற defence ஆஃபீஸில் சேரும்போது என்னுடைய முதல் மொத்த சம்பளம் 250க்கும் கீழ். 1956-ல் தாத்தாவிற்கு என்ன கிடைத்திருக்கும்? பத்மா அத்தைக்கு 1955-ல் திருமணம்; அண்ணாவிற்கு 1956-ல் திருமணம். இரண்டு திருமணங்களுக்கும் செலவு செய்திருப்பார். அண்ணாவிற்கு மட்டுமே வேலை; அதுவும் சொற்ப சம்பளத்தில். அண்ணாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டது, மன்னியும் வந்தாயிற்று. வேறு யாருக்குமே வ...

ஸ்ரீ ராமஜயமே

ஸ்ரீ ராமர் பதிகம்     1.      சீர்மேவு மாழ்வார்கள் பன்னிருவருன் புகழ் செப்பவும் ராம ஜெயமே திருவடிக் கன்பராய்ச் செல்வமு முத்தியுஞ் சித்திதரும் ராம ஜெயமே . கார்மேகவண்ணனே யென்ற திரௌபதையை முன் காத்திட்ட ராமஜெயமே கரியாதி மூலமென் றோலமிட முதலையைக் கண்டித்த ராமஜெயமே பார்மீதி லுன்பாத தூளிபட்டெழுந்த கலிபரிவான ராமஜெயமே பாங்கான வேடன் மராமரா வெனப் பதவி புரிந்திட்ட ராமஜெயமே ஆர்தா னுரைக்க வரவாருத்த னாமத்தையனு தினமும் ராமஜெயமே ஐயனே யெனையாளு மெய்யனே ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே . 2. விஞ்சுகா ரணியவன ரிஷிகளுக்காதரவு மேவிடும் ராமஜெயமே மேலான தசரதன் மைந்தனாப் புவிதனில் விரைந்திடும் ராமஜெயமே செஞ்சொன்மொழி ஜெனகராஜன் வில்லொடித்து ஜெயம்பெற்ற ராமஜெயமே சீதைக்கிரண்டு வரங்கொடுத்துமே யயோத்தியில் சீர்பெற்ற ராமஜெயமே தஞ்சமென்றனு மன்றனக்கு சிரஞ்சீவி தந்திட்ட ராமஜெயமே தந்தைக்குரைத்த சொல் வழுவாது தாரணியில் தந்தருளும் ராமஜெயமே அஞ்சலென்றடி யேனை யாதரித் துன்பாத மருள்செயும் ராமஜெயமே ஐயனே யெனையாளு மெய்யனே ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே . 3. விண்ணொளிய தாகவே ...