Skip to main content

Posts

Showing posts with the label மாவடு

ஊறுகாய்கள் பலவிதம் ...

சீஸனுக்கு ஏற்றவாறு ஊறுகாய்கள் போடுவதில் விஜயா மிகவும் திறமைசாலி. முன்வைத்த காலை பின்வாங்காமல் “கருமமே கண்ணாயினார்” என்பதற்கேற்ப எப்படியும் ஊறுகாய்களை போட்டுவிடுவாள். # 1 மாவடு வெயிற்காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாஸத்தில் தெற்கு மாடவீதியில் மாவடுக்கள் கொட்டி இருக்கும். அந்தக் கடைகளைத் தாண்டி செல்லும்போது அவள் கண்கள் மின்னும். முதலில் சில நாட்கள் சும்மா பார்த்து விட்டு, ஒரு நாள் திடீரென முடிவெடுப்பாள். அன்று வாங்கிவிடுவாள். அன்றிரவே ஊறுகாய்க்கான ஆரம்ப வேலைகள் நடக்கும். அடுத்த 5-ஆம் நாள் தயிர் / மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாவடு கிடைக்கும். இந்த வருஷம் (2009) மார்ச் 25-ஆம் தேதியன்று 5 படி (ரூ 20 / படி வீதம்) வாங்கி ஊறுகாய் போட்டாள்; பின்னர் ரமாவிற்கும் 5 படி வாங்கி ஹைதராபாத் அனுப்பினாள். # 2. ஆவக்காய் அருண், அர்விந்த், அஷோக், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சூடான சாதத்தில் ஆவக்காயைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் .... ஓ! நல்ல வெயில் காலத்தில்தான் மாங்காய்கள் கிடைக்கும். வழக்கமாக, கிருத்திகாவின் பெற்றோர் வீட்டிலிருந்து (அவர்கள் வீட்டில் மாமரம் உள்ளது) காய்கள் ...

மயிலாப்பூரும், மாவடுவும் .. Mylapore and Maavadu

கோடை காலத்திற்கான் முன் அறிவிப்பு அறிகுறிகளில், மயிலாப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் மாவடு வரவு முக்கியமான ஒன்று. தெற்கு மாட வீதியில் கொட்டி வைத்திருக்கும் மாவடுக்களை பார்க்கும்போதே நம் வீட்டு பெண்களுக்கு கைகள் உதற ஆரம்பித்து விடும்; உடம்பும் என்னவோ பண்ணும். அந்த க்ஷணமே மாவடுக்களை வாங்கி, ஊறுகாய் போட கை துறுதுறுக்கும். விஜயாவும் இந்த உலக நியதிக்கு விலக்கு அல்ல - விதவிதமாக ஊறுகாய் போடுவதில் அவள் ஒரு எக்ஸ்பர்ட். இந்த 2009 வருஷம் விஜயாவை முந்திக்கொண்டு விட்டாள் எங்கள் காயத்ரி! வாசலில் வந்தது என 2 படி மாவடு வாங்கி, விஜயாவிடமிருந்து செய்முறை கேட்டறிந்து, காயத்ரி ஊறுகாய் போட்டுவிட்டாள். ஊறுகாய்க்கு தேவைப்படும் கல்லுப்பு, மிளகாய்ப் பொடி (ஹைதராபாத் பொடி) ஆகியவைகளை விஜயா தயார் பண்ணிக்கொண்டு, மாவடு 5 படி (படி 20.00) வாங்கி ஊறுகாய் போட்டாள். இப்போது தினமும் தொட்டுக்க மாவடுதான். இதோ இன்று - 10 ஏப்ரல் - மயிலாப்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு 5 படி மாவடு பயணம் செய்கிறது. ராஜப்பா 8:10 இரவு, 10-04-2009

தயிர் சாதமும் வாழைப்பூ மடலும்

Thayir Saadam and Vaazhaipoo madal *** adapted from what I read somewhere சொல்லி மாளுமா என்று தெரியவில்லை. வக்கணையாக செய்யப்பட்ட தயிர்சாதத்தை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் முதல் கட்டமாக சிலவற்றைச் சொல்லலாம். ஆவக்காய், எலுமிச்சை இதர ஊறுகாய் வகைகள், சாம்பார், குழம்பு, காய், கூட்டு, துவையல்… எல்லாவற்றையும் முந்திக் கொண்டு மாவடு. இன்னும் முக்கியமாக வேறு எதனோடும் சேராமல் அல்லது தயிர்சாதத்திற்கென்றே பிரத்யேகமாக ஜீவித்திருப்பது மோர்மிளகாய். எனக்குத் தெரிந்து வீட்டைத் தவிர ஹோட்டல்களில் சரவண பவனுக்குத்தான் இதில் முதலிடம். குறிப்புகள் இனி வரும். வாழைப்பூ கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்முன் கொஞ்சம் சொந்தக் கதை. வாழைப்பூ வாங்கி உரிக்கும் நாளிலெல்லாம் எங்களுக்கு பாட்டி சாதம் பிசைந்து கையில் போடுவார். கைக்கு அடியில் வாழைப்பூவின் மடலில் ஊறுகாயை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டால்(மாவடுவாக இருந்தால் ஒரு கடி கடித்து வாயிலேயே வைத்துக் கொள்ளலாம்.), அதில் பாட்டி சாதத்தைப் போட, அது பாட்டுக்கு அளவில்லாமல் உள்ளே இறங்கு...