வைத்தீஸ்வரன் கோயில் 2018 ஜனவரி 15 ஆம் தேதி யன்று வை. கோயில் போகலாம் என எண்ணம் உதித்தது. நிறைய பேருக்கு ஃபோன் பண்ணி விஷயங்களை அறிந்து கொண்டோம். அங்கு ஸ்ரீகிருஷ்ணா ரெஸிடென்ஸி என்னும் லாட்ஜில் தங்க ஃபோன் பண்ணி ரூம் புக் பண்ணினோம். லலிதா குமாரை கேட்டபோது, அவர்களும் வருவதாக சொன்னார்கள். ஸ்ரீ பாலாஜி cabs ல் டாக்ஸி புக் பண்ணினோம். கிமீ 11 ரூ. 22 ஜனவரி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெடியானோம். லலிதா குமார் 7-30 க்கு வந்தனர். டிரைவரும் அப்போதுதான் வந்தார். 7-40 க்கு கிளம்பினோம். ECR வழியாக சென்றோம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி இட்லி சாப்பிட்டோம். (வீட்டில் விஜயா பண்ணினாள்). நேராக கடலூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போனோம். பத்து நிமிஷங்களில் ஸ்ரீ தேவநாதன் குருக்கள் வந்தார். இவருடைய ஃபோன் எண்ணை வாசு வாங்கி தந்தான். அவரிடமும் ஏற்பாடுகள் செய்தான். அவர் அர்ச்சனை பண்ணிவிட்டு, பிரசாதங்கள் கொடுத்தார். 1/2 கிலோ சக்கரை பொங்கல், 1/2 கிலோ புளியோதரை, 1/2 கிலோ தயிர்சாதம் சொல்லியிருந்தேன். பாத்திரங்களும் கொண்டு போயிருந்தோம். நிறய்ய பண்ணியிருந்தார். கொடுத்தார். அங்கேயே, அன்னதான கூடத்தில் இலை போட்டு சாப்...