Skip to main content

Posts

Showing posts from December, 2008

ஹோட்டலில் சாப்பாடு Hotel Meals

ஹோட்டலில் சாப்பாடு - Hotel Amavaravathy, TTK Road ரொம்ப நாளாகவே ஹோட்டலுக்குப் போக வேண்டும், முழு சாப்பாடு சாப்பிட வேண்டும் என ஆசையாக இருந்தது. சமீபத்தில், அக்டோபரில் கோயம்பத்தூரில், ஊட்டியில் சாப்பிட்டோம் என்றாலும், சென்னையில் சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை - அதுவும் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட ஆசை. டிச 27 (சனிக்கிழமை) காலை இந்த என் எண்ணத்தை சொன்னவுடன், அர்விந்த், விஜயா ஆகியோர் உடனே ஒத்துக் கொண்டனர். அஷோக்கும், நீரஜாவும் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருந்தார்கள். அவர்களும் வர சம்மதித்தனர். அவர்கள் அருண் வீட்டிலிருந்து, காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை அழைத்துக் கொண்டு அருண் காரில் வருவதாக சொன்னார்கள். 7 பேரும், 3 குழந்தைகளுமாக இரண்டு கார்களில், ஹோட்டல் அமராவதி க்குச் சென்றோம். ஆழ்வார்பேட்டை TTK வீதியில், ம்யூசிக் அகாடெமி அருகில் உள்ளது இது. ஆந்திரா சாப்பாட்டிற்கு இது புகழ்பெற்றது. ஆந்திரா பருப்பு சாதத்தில் ஆரம்பித்து, கீரை, சாம்பார், காரக்குழம்பு, ரசம், 2 வித பொரியல், பருப்புப் பொடி, அப்பளம், வடாம், தயிர், கோங்கூரா சட்டினி, ஆவக்காய் ஊறுகாய், ஜாங்கிரி, வாழைப்பழம், பீடா என சாப்பாடு

Pancharathna Keerthanai Mahathmiyam - VISHAKHA HARI

பஞ்சரத்ன கீர்த்தனை மஹாத்மியம் - விஷாகா ஹரி டிசம்பர் 25-ஆம் தேதி (2008) காலை 10 மணிக்கு மயிலாப்பூரில் விஷாகா ஹரியின் (VISHAKHA HARI) உபன்யாஸம். கூட்டம் வரும் என்பது தெரிந்த விஷயமாதலால், காலை 8-30க்கே அங்கு போய்விட்டோம். அப்போதே முதல் 20 வரிசைகள் நிரம்பிவிட்டன. 10 மணிக்கு உபன்யாஸம் ஆரம்பித்தது - தியாகராஜ ஸ்வாமிகளின் "பஞ்ச ரத்ன கீர்த்தனை மஹாத்மியம்" என்ற தலைப்பில். இந்த பஞ்சரத்ன கீர்த்தனைகள் ப்ற்றி யாவரும் அறிந்ததே. தியாகராஜ ஆராதனையில் ஆண்டுதோறும் பாடப்படுவது. மொத்தம் 5 கீர்த்தனைகள். ஒவ்வொரு கீர்த்தனையாகப் பாடி, அதன் மஹாத்மியத்தை விளக்கிக் கூறினார். முதல் கீர்த்தனை - "ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என ஆரம்பிக்கும், ஸ்ரீராமரைக் குறித்த பாட்டு. ஸ்ரீராம சரித்திரத்தையே சுருக்கமாக விஷாகா ஹரி சொல்லி (பாடி) முடித்தார். ஸ்ரீராமனின் குணவிசேஷங்களை விவரிக்கும் கீர்த்தனை. மிக நன்றாக இருந்த்து. 2-வது - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல். "மானிட ஜன்மம் கிடைத்தற்கு அரியதென்று பரமானந்தம் அடையாமல், மதம், பொற

மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் ... marghazhi

" மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் " (அத் 10 ஸ்லோ 35) என்று மாதங்களில் மார்கழியை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சிறப்பித்துக் கூறியுள்ளார். மார்கழி என்றதுமே ஆண்டாளும், திருப்பாவை பாசுரங்களும், கண்ணனும் நினைவுக்கு வரும். (சுடச்சுட பொங்கலுக்கு விடியலில் சீக்கிரமே கோயிலுக்குப் போக வேண்டுமாதலால், நிறையப் பேரால் ஆசையிருந்தும் அது முடிவதில்லை என்பது வேறு விஷயம்.) திருப்பாவையில் கண்ணன் ஆண்டாளுக்கு அன்பனாக வருகிறான்; கீதையில் அர்ஜுனனுக்கு நண்பனாக, உபதேஸம் செய்யும் கீதாசாரியனாக வ்ருகிறான். ஆண்டாள் காட்டிய பக்திக்கும், அர்ஜுனன் காட்டிய பக்திக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் உண்டு. உங்களுடன் ஸ்கூலில் 1-வது முதல் 10-வது வரை ஒன்றாகப் படித்து பின்னர் வேறு ஊருக்கு மாறிவிட்ட உங்கள் பாலிய வயது ஸ்நேகிதன் முப்பது ஆண்டுகள் கழிந்து திடீரென சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாக உங்கள் முன் வந்தால், அவனை (அவரை?) எப்படி கூப்பிடுவீர்கள்? அவனுடன் (அவருடன்) எப்படி பழகுவீர்கள்?? ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கப்போன ஸுதாமாவின் மனநிலை போன்று இருக்குமா? இதே DILEMMA நிலைதான் ஆண்டாளுக்கும் இருந்தது; அர்ஜுனனுக்கும் இருந்தது. இருவரும் எப்பட

மஹாகவி பாரதியார் - Bharatiyar

மஹாகவி பாரதியார் . A Tribute by Smt NITHYASRI MAHADEVAN நேற்று (11-12-2008) மஹாகவியின் 126வது பிறந்தநாள். பாரதியாரைப் பற்றி புதிதாக எழுத, சொல்ல என்ன இருக்கிறது ?! நேற்று செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூல் குமார ராஜா முத்தையா செட்டியார் அரங்கில் ஸ்ரீமதி நித்யஸ்ரீ மஹாதேவன் பாரதியார் பாடல்கள் சிலவற்றைப் பாடினார். மஹாகவியின் இனிய பாடல்களை நினைவுகூர ஒரு இனிய் வாய்ப்பாக இது அமைந்தது. (அரங்கைப் பற்றிய விவரம்) கூட்டத்தை எதிர்பார்த்து, நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கே அரங்கில் இருந்தோம். 6-30 க்குத்தான் நித்யஸ்ரீ தன்னுடைய இன்னிசையை துவங்கினார். "பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத் தால் " என்று துவங்கும் பாரதமாதா திருப்பள்ளி யெழுச்சி பாடலுடன் கச்சேரி ஆரம்பமாகியது. " மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ " என பாரதத்தாயை வணங்கி பள்ளியெழுச்சி பாடும் பரவசப் பாடல். அரங்கே அமைதியில்; இன்னிசையில் கட்டுண்டோம். அடுத்து வந்தது, " வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்; வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்" என்ற கேட்கக் கேட்கத் திகட்டாத ஸரஸ்வதி தேவியின் புகழ். ஒரு முறை இந்தப் பாட்டை ம

குமாரராஜா முத்தையா இசையரங்கம் Chettinad Vidhyashram

குமாரராஜா முத்தையா இசையரங்கம், ராஜா அண்ணாமலைபுரம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (எங்கள் வீட்டிற்கு அருகில்) செட்டிநாடு வித்யாஷ்ரம் (Chettinad Vidhyashram) என்ற புகழ்பெற்ற ஒரு ஸ்கூல் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்களின் வம்சத்தினர் இந்த் ஸ்கூலை நிறுவி, நிர்வகித்து வருகின்றனர். (ஏரியா பெயரே ராஜா அண்ணாமலைபுரம் !!) இந்த ஸ்கூலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 15 வரை தினம்தினம் கர்னாடக இசைக்கலைஞர்களை கூப்பிட்டு கச்சேரிகள் நிகழ்த்துகிறார்கள். பாடுபவர்கள் எல்லாருமே மிகப் புகழ்பெற்றவர்கள் ! அனுமதி இலவசம் . பல கச்சேரிகளுக்கு கூட்டம் அலைமோதும். தொட்டுவிடும் தூரத்தில் உள்ள வங்கக்கடலுக்குப் போட்டியாக இங்கும் ரசிகர்கள் கடல் இருக்கும். 6-30 மணிக்கு ஆரம்பமாகும் கச்சேரிக்கு 4-30 மணிக்கே கூட்டம் பிதுங்கி வழியும். (இது எல்லா கச்சேரிகளுக்கும் பொருந்தாது.) பெரிய்ய பார்க்கிங் ஏரியா. நிறைய கார்களை தாராளமாக நிறுத்தலாம். இருந்தும், சில கச்சேரிகளுக்கு வரும் கார்கள், இந்த பார்க்கிங்கும் போதாமல், துணை ரோடு, மெயின் ரோடு .... என கார்கள் நிறுத்தவே இடம் போதாது. (இந்த கார்களில் வருபவர்களுக்கு எதற்கு அனுமதி இ

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் Velukkudi Krishnan Swamigal

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் தினந்தோறும் காலை 6-30 முதல் 6-45 வரை தெள்ளிய தமிழில் கீதை உபன்யாஸம் செய்து வருவது (பொதிகை டிவியில்) தெரிந்ததே. 2007 ஜனவரி 18 ஆம் தேதி வியாழனன்று உபன்யாஸம் துவங்கியது. இரண்டு வருஷங்கள் ஆகப்போகின்றன. இவரைப்பற்றியும் இவரது கீதை உபன்யாஸத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் 02-01-2008 அன்றும், 18-01-2008 அன்றும் எழுதியுள்ளேன். முதல் பதிவு இங்கேயும் , அடுத்தது இங்கேயும் படிக்கவும். இந்த 2008 டிசம்பர் 12 வெள்ளியன்று அவரது 500வது சொற்பொழிவு! கீதையின் 12வது அத்தியாயம் முதல் ஸ்லோகம் சொல்லுகிறார். 500 சொற்பொழிவுகளில் 475 க்கும் மேலாக விஜயாவும் நானும் விடாமல் கேட்டுக்கொண்டு வந்துள்ளோம். முதலில், இரண்டு நாட்கள் குளிக்காமல் கேட்ட நான் பின்னர் 6 மணிக்கு தினமும் குளித்துவிட்டு கேட்க ஆரம்பித்தேன். 6 மணிக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக 5-45, 5-30, 5-00 மணியென சீக்கிரமாக எழுந்துகொண்டு உடனே குளித்து ... என மாறியது. சென்ற இரண்டு மாதங்களாக இது 4-30 அல்லது 4-45 என இன்னும் சீக்கிரமாக மாறியுள்ளது. இந்தமாதிரி ஒரு நியமமும், மனக்கட்டுப்பாடும் எனக்கு எப்படி வந்தது? யார் அருளியது? ஸ்ர

The ONE and ONLY SUJATHA

கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா சுஜாதாவின் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதே, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நல்நோக்கில் இதோ .... கடவுள்களின் பள்ளத்தாக்கு . "திவ்ய தேச க்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்யக் குதூகலமுள்ள பக்தர்களுக்கு, அவை சம்பந்தமான சகல விவரங்களையும் தெரிவிப்பதற்கான பத்ரி யாத்திரை விளக்கு" - மேற்கண்ட தலைப்பின் கீழ் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் 40 வருஷங்களுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் போனபோது யாத்திரையில் உள்ள கஷ்ட-சுகங்களையும், தபால் ஆபீஸ் விவரங்கள் உட்பட்ட காட்சிகளையும் சம்ஸ்கிருதமும் தமிழும் மயங்கிக் கலந்த ஒரு வசீகர வசன நடையில் விவரித்திருக்கிறார். 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்... "முதுகு பற்றிக் கைத் தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி, விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டிருமி, இது வென் அப்பர் முத்தவா றென்று இளையவர் ஏசா முன், மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே'" என்று முதுகில் ஒரு கை வைத்துக் குச்சி ஊன்றி இருமிக்கொண்டு, மேல் மூச்சு வாங்கிக்கொண்டு -

KVS Athimber - 10th and 13th Day Rites

Saturday, 29 Nov 2008 Today is the 10th Day after KVS Athimber passed away on 20 Nov. Read This morning we - self, Vijaya, and Arvind - started from our house by 7-30 for Central Stn and Ambattur. As many roads in Chennai were water-logged due to the recent rains, we went by local train. Sugavanam reached a little later (the same train route). The 10th day rites of KVS Athimber started by 9-45 AM. Each one of us offered saatham to KVS Athimber and it was Padma akka who offered it last, with tears in her eyes. Then Rajeswari and Srividya kept bakshanams and Palaharams over the rice. The rites were completed in an hour. Prakash, Rajeswari and Srividya went to immerse the "Pindam". Those who were in the house took bath. After Prakash returned, Padma akka took bath and I gave the sari that all of us brothers purchased for her. Then Prakash gave a sari and finally Pasupati gave a sari. Padma akka wore the sari that we brothers gave her. Then we ate. Caterer_mami brought the foo