இதுக்கு முன்னாலேயே சொல்லிட்டேன் - மயிலாப்பூரை, கோயில் மாடவீதிகளை, கிரி டிரேடிங்ஸ் (Giri Tradings), பத்தி திரும்ப திரும்ப எழுத, எனக்கு அலுக்காது, எப்பவும் சலிக்காதுன்னு. நேற்று (30 டிசம்பர் 2007) மாலையும் சென்றேன் (விஜயாவுடன்). வாசுவிற்கு ஒரு சில சாமான்கள் தேவைப்பட்டதால் அவற்றை வாங்கலாம் எனப் போனோம். நேற்று என்ன விசேஷம்னு தெரியலே, வெள்ளீஸ்வரர் கோயிலிலே ஒரே கூட்டம். வழக்கமான மார்கழி மாச கூட்டம்தானோ? அங்கிருந்து இடது பக்கம் திரும்பி, ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாகப் போனோம். ரெண்டு மாசங்களுக்கு முன்பு இடியால் சேதமுற்ற கோபுரத்தை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது - கோபுரத்தை தென்னங்கீற்றுகளால் மூடியிருந்தார்கள். கோயிலின் உள்ளே போகவில்லை - போலாமா, கூடாதா எனக் குழப்பம். "கோபுர தரிசனம், கோடி பாப விமோசனம்" என அமைதிப்படுத்திக் கொண்டு, கிரி கடையில் நுழைந்தோம். இந்தக் கடையில் நுழையும் ஒவ்வொரு முறையும் ஆனந்தம், பரவசம்தான். 2-ம் மாடியில் பாட்டு CDக்களை கேட்க, வாங்க ஒரே கூட்டம். ஸ்ரீமதி விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) உபன்யாச CD / DVDக்களான "சுந்தர காண்டம்" மற்றும் ...