வால்மீகி, துளஸிதாஸர், கம்பர் ஆகியவர்களைத் தவிர வேறு நிறைய பேர் ராமாயணத்தை (ராம காதையை) எழுதியுள்ளார்கள். குறிப்பாக, தமிழில் “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய ராமாயணம் மிக பிரசித்தம். இந்த புஸ்தகம் இல்லாத வீடே அந்த கால கட்டத்தில் இருந்திருக்காது. “ராம சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ... எல்லாரும் படிக்க வேண்டும். படித்தால் நல்ல பயனையும், பகவான் கருணையையும் பெறுவார்கள்” என்று 1967-ல் குறிப்பிட்ட ராஜாஜி மிக எளிமையான தமிழில் - சிறுவர்கள், சிறுமிகள் கூட படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு - ராமாயணத்தை எழுதியுள்ளார். “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் 3-3-1956ல் முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழகம் முழுதும், CRAZE என்று சொல்வார்களே அது போன்று புஸ்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. ஒன்பது பதிப்புகள் வந்தன (வானதி பதிப்பகம்). சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. பல லக்ஷம் பிரதிகளுக்கு மேல் விற்ற இது, ராஜாஜியின் விருப்பத்தின் பேரில் பின்னர் தலைப்பு மாற்றப் பட்டு “ராமாயணம்” என்னும் புதிய தலைப்பில் ஜனவரி 1973ல் வெளிவந்தது. இதுவரை 33 பதிப்புகள் இந்த...