மயிலாப்பூர். நேற்று (16/08/2012) மாலை நாங்கள் இருவரும் மயிலாப்பூர் சென்றோம். மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்று நான்கு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. முதலில் தெற்கு மாட வீதி வழியாகச் சென்று, சில காய்கறிகள் வாங்கினோம். மிதி பாகற்காய், சுண்டைக்காய், களாக் காய், சில கொட்டை வகைகள் போன்ற அரிதானவற்றை வாங்கினோம். பின்னர் கோயில் நோக்கி புறப்பட்டோம். வழியில், ”ஜன்னல் கடையில்” மிளகாய் பஜ்ஜி, உ.கிழங்கு போண்டா ஆகியவற்றை சாப்பிட்டோம். இந்த கடையைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். கூட்டம் இன்னும் குறையவில்லை. பஜ்ஜியும், போண்டாவும் “பறந்து” கொண்டிருந்தன. விலையைத் தான் ஏற்றி விட்டார்கள். கோயிலில் வழக்கம்போல பக்தர்கள் கூட்டம். பளபளவென்றிருந்தது. ஸ்ரீகற்பகாம்பாள் உடனாய ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு திருப்தியாக தரிஸித்துக் கொண்டோம். கோயிலில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டன. அடுத்து, கிரி கடை. யஜுர் உபாகர்மா புஸ்தகம் (சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும்) வாங்கினேன். விரைவிலேயே கிரி கடை தன்னுடைய இன்னொரு கிளையை அண்ணாநகரில், ஐயப்பன் கோயிலுக்கு அருகில், திறக்க இருக்கிறார்கள். அம்பிகா கடைக்குச் சென்று அப்பளம் முதலான சில ...