தோழிகள் மூவருடன் விஜயா 14 ஃபிப்ரவரி 2014 அன்று காலை 7-40 ரயிலில் திருச்சி கிளம்பினாள். ஏற்கனவே இன்னொரு டிக்கெட்டும் மார்ச் மாஸத்திற்கு வாங்கி அதை கான்சல் செய்தோம். எழும்பூரில் அவள் Mrs KOIKILA வை சந்தித்து இருவருமாக ரயிலில் ஏறினர். தாம்பரம் ஸ்டேஷனில் Mrs DEVASUNDARI, Mrs PREMA இருவரும் சேர்ந்து கொண்டனர். ஓடும் ரயிலில் காலை சிற்றுண்டியை சாப்பிட்டனர். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு மதியம் 1-30க்கு அடைந்தனர். தேவசுந்தரி அவர்களின் நண்பர் வீட்டில் தடபுடலான விருந்து சாப்பாடு. பின்னர் ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு பல கோயில்களுக்கு சென்றனர். 15-ஆம் தேதி சனிக்கிழமையும் டாக்ஸியில் கிளம்பி நிறைய கோயில்கள் பார்த்து ஸ்வாமி / அம்மன் தரிஸனம் பண்ணினர். அன்றும் அந்த வீட்டில் தூங்கினர். 16-ஆம் தேதி ஞாயிறு காலை 6-30 பல்லவன் ரயிலில் கிளம்பி, தாம்பரத்தில் 11-45க்கு இறங்கினர். விஜயா மட்டும் T21 பஸ்ஸில் பயணித்து திருவான்மியூர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். திருச்சியில் அவர்கள் தரிசித்த கோயில்கள் --- 14-02-2014 சனிக்கிழமை 1) திருவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் 2) செட்டிகுளம் (முர...