அஷோக் புது வீடு கிருஹப் பிரவேசம் அஷோக் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு கிருஹப் பிரவேசம் செய்தான். 80% முடிந்த நிலையில், 2007 ஆகஸ்ட் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது. நானும் விஜயாவும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூர் போனோம். அருண், அர்விந்த் ஆகியோர் 30ஆம் தேதி விடியற்காலை வந்தனர். காயத்ரியின் அப்பா, அம்மாவும் வந்தனர். அன்று காலை 11 மணிக்கு சாவித்திரி ஹோசூரிலிருந்து வந்தாள். இரவு சுகவனமும் கிரிஜாவும் வந்தனர். எல்லாருக்கும் சாப்பாடு "ஐயங்கார்” கடையிலிருந்து தருவித்தோம். அஷோக் மற்றும் நீரஜா இருவரும் நாலு, ஐந்து மாசங்களாகவே அலுக்காமல் சலிக்காமல் புது வீட்டிற்கென ஓடி ஓடி வேலை செய்தனர். கடைசி 7 நாட்களில் தினம் தினம் 5,6 முறையாவது புது வீட்டிற்குச் சென்று வேலை பண்ணினார்கள். அவர்களது அயராத உழைப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி கண்கூடாகத் தெரிந்தது. 30 ஆம் தேதி ஏழு எட்டு தடவையாவது அஷோக் தன்னுடைய புது வீட்டிற்குச் சென்று GAS போன்ற சாமான்களை வைத்து விட்டு வந்தான். அஷோக், நீரஜா இருவரது முகங்களிலும் ஒருவித TENSION காணப்பட்டது. 31 ஆம் தேதியும் விடிந்தது - காலை 2-30க்கே எழுந்து நாங்கள் 4 பேரும...