SRI PARTHASARATHY PERUMAL KOIL, TIRUVALLIKKENI ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி நேற்று (08-மே-2008) மாலை 5-15 மணி அளவில், நானும் விஜயாவும் சும்மா "நடை பயில" (walking) புறப்பட்டோம். திடீரென எனக்கு "கோயிலுக்குப் போகலாமே" எனத் தோன்றியது. உடனடியாக 21L பஸ் பிடித்து, கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். பஸ் வந்த வழியே திரும்பி நடந்து - அடுத்த முறை விவேகானந்தர் இல்லத்திலேயே இறங்கிக் கொள்ளவேண்டும் - சுங்குவார் தெருமுனையில் உள்ள " கீழக் கோபுர நுழைவாயிலின் " வழியாக நடக்க ஆரம்பித்தோம். 5 நிமிட நடைக்குப் பிறகு, கோயில் குளம் தென்பட்டது - குளத்தில் தண்ணீர் இருக்கிறது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாங்கள் நுழையும்போது மாலை 6 மணி. பிரம்மோத்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. உத்சவ மூர்த்திக்கு மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருந்தனர். நிறையக் கூட்டம். Sri Parthasarathy Perumal கோயில் உள்ளே கூட்டம் இல்லை. பெருமாளுக்கு மிக அருகில் நின்று கொண்டு தரிசித்தோம். மனசுக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீவேதவல்லித் தாயாரையும் தரிசித்து, ஆண்டாள், யோக...