SRI PARTHASARATHY PERUMAL KOIL, TIRUVALLIKKENI
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி
நேற்று (08-மே-2008) மாலை 5-15 மணி அளவில், நானும் விஜயாவும் சும்மா "நடை பயில" (walking) புறப்பட்டோம். திடீரென எனக்கு "கோயிலுக்குப் போகலாமே" எனத் தோன்றியது. உடனடியாக 21L பஸ் பிடித்து, கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம்.
பஸ் வந்த வழியே திரும்பி நடந்து - அடுத்த முறை விவேகானந்தர் இல்லத்திலேயே இறங்கிக் கொள்ளவேண்டும் - சுங்குவார் தெருமுனையில் உள்ள "கீழக் கோபுர நுழைவாயிலின்" வழியாக நடக்க ஆரம்பித்தோம். 5 நிமிட நடைக்குப் பிறகு, கோயில் குளம் தென்பட்டது - குளத்தில் தண்ணீர் இருக்கிறது.
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாங்கள் நுழையும்போது மாலை 6 மணி. பிரம்மோத்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. உத்சவ மூர்த்திக்கு மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருந்தனர். நிறையக் கூட்டம்.
Sri Parthasarathy Perumal
கோயில் உள்ளே கூட்டம் இல்லை. பெருமாளுக்கு மிக அருகில் நின்று கொண்டு தரிசித்தோம். மனசுக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீவேதவல்லித் தாயாரையும் தரிசித்து, ஆண்டாள், யோக நரசிம்ஹர் சன்னதிகளிலும் மனமார வேண்டிக்கொண்டு, கோயிலை விட்டு வெளியே வரும்போது 6-45 மணி.
Shri Yoga Narasimhar (அழகியசிங்கர்)
தெற்கு மாட வீதி, TP Koil street வழியாக நடந்தோம். திருவல்லிக்கேணியின் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற தெருக்களை ரசித்துக் கொண்டிருந்தோம். TP கோயில் வீதியில் மஹாகவி பாரதியார் நினைவு இல்லம் இருப்பது தெரிந்ததே.
இடப்பக்கம் திரும்பி, தி-கேணியின் புகழ்பெற்ற வீதியோர கறிகாய் கடைகளை பார்த்துக் கொண்டே, திருவல்லிக்கேணி High Road சென்றோம். இந்த வீதியில் ரத்னா கபே (படிக்கவும்) இருப்பது யாவரும் அறிந்ததே. ரத்னா கபேயை பார்த்து விட்டு, உள்ளே போகாமல் இருக்க முடியுமா? என்னால் முடியாது. இரண்டு இட்லிகளும், தூக்குவாளி நெறய்ய சாம்பாரும் சாப்பிட்ட பின்னர், ஆட்டோ பிடித்து வீடு திரும்பினோம்.
மயிலாப்பூர் போலவே, திருவல்லிக்கேணியும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்த தொன்மையான அழகிய இடம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி மயிலாப்பூரின் ஒரு பகுதியாகவே இருந்தது உங்களுக்குத் தெரியுமா?
{Tiruvallikkeni Ratna Cafe)
ராஜப்பா
11.00 காலை 09-05-2008

Comments