ஸ்ரீமதி விஷாகா ஹரி உபன்யாஸம். ஸ்ரீ வெங்கடாத்ரி மஹாத்மியம். பேப்பர்களில் இந்த உபன்யாஸத்தைப் பற்றி அறிவிப்புகள் வந்தன. ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் மாலை 6-30 முதல் 8-30 வரை இருக்கும் என அறிவித்திருந்தனர். Most Mesmerising விஷாகா ஹரி என்றால் கூட்டம் அதிகமாக வரும் என்பது தெரிந்ததே; எனவே, அன்று மாலை 4-45க்கே 12-B பஸ் பிடித்து ஆஸ்திக சமாஜத்திற்கு 5-10க்கு போய்விட்டோம். 5-10க்கே 70% நிரம்பி விட்டது. வேதபாராயணம் முதலில் நடந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் விஷாகாவின் உபன்யாஸம் அன்று நடைபெறவில்லை. கூட்டம் கலைந்து போய்விட்டது. மறுநாள் ( 7-6-2008, சனிக்கிழமை ) மாலை 4-30க்கே கிளம்பினோம். அர்விந்த் காரில் எங்களை கொண்டு விட்டான். 5-30க்கு முன்பாகவே ஹால் பிதுங்கி வழிந்தது - என்ன ஒரு கூட்டம் ! வேத பாராயணத்திற்கு பிறகு, சரியாக 6-30க்கு உபன்யாஸம் துவங்கியது. Trademark 9-கஜம் மடிசார் பட்டு புடவை, வாய் நிறைய மலர்ந்த சிரிப்பு, கணீர் குரல் - விஷாகா ஹரி ஸ்ரீவெங்கடாத்ரி மஹாத்மிய உபன்யாஸத்தை ஆரம்பித்தார். எள்ளு போட்டால் எள்ளு விழும் நிசப்தத்...