Skip to main content

Vishaka Hari and Sri Venkatadri Mahatmiyam

ஸ்ரீமதி விஷாகா ஹரி உபன்யாஸம். ஸ்ரீ வெங்கடாத்ரி மஹாத்மியம்.

பேப்பர்களில் இந்த உபன்யாஸத்தைப் பற்றி அறிவிப்புகள் வந்தன. ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் மாலை 6-30 முதல் 8-30 வரை இருக்கும் என அறிவித்திருந்தனர்.

Most Mesmerising


விஷாகா ஹரி என்றால் கூட்டம் அதிகமாக வரும் என்பது தெரிந்ததே; எனவே, அன்று மாலை 4-45க்கே 12-B பஸ் பிடித்து ஆஸ்திக சமாஜத்திற்கு 5-10க்கு போய்விட்டோம். 5-10க்கே 70% நிரம்பி விட்டது. வேதபாராயணம் முதலில் நடந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் விஷாகாவின் உபன்யாஸம் அன்று நடைபெறவில்லை. கூட்டம் கலைந்து போய்விட்டது.

மறுநாள் (7-6-2008, சனிக்கிழமை) மாலை 4-30க்கே கிளம்பினோம். அர்விந்த் காரில் எங்களை கொண்டு விட்டான். 5-30க்கு முன்பாகவே ஹால் பிதுங்கி வழிந்தது - என்ன ஒரு கூட்டம் ! வேத பாராயணத்திற்கு பிறகு, சரியாக 6-30க்கு உபன்யாஸம் துவங்கியது. Trademark 9-கஜம் மடிசார் பட்டு புடவை, வாய் நிறைய மலர்ந்த சிரிப்பு, கணீர் குரல் - விஷாகா ஹரி ஸ்ரீவெங்கடாத்ரி மஹாத்மிய உபன்யாஸத்தை ஆரம்பித்தார். எள்ளு போட்டால் எள்ளு விழும் நிசப்தத்தில் கூட்டம் அனுபவிக்க ஆரம்பித்தது. நேரம் போனதே தெரியவில்லை. 8-45க்கு முடிந்தது. திருப்பதியிலிருந்து, வீனஸ் காலனி திரும்பினோம். சுடச்சுட கேசரி கொடுத்தனர்.

8-6-2008 ஞாயிறு - இன்று காலை சாவித்திரி ஹோசூரிலிருந்து வந்தாள். அவளையும் அழைத்துக் கொண்டு 4-30 க்கு வீனஸ் காலனி கிளம்பினோம். நேற்றைய விட இன்று கூட்டம் மிக அதிகம். எங்கு பார்த்தாலும், இருக்கும் இடங்களில் எல்லாம் அதிகப்படி நாற்காலிகள் போட்டும் சமாளிக்க முடியவில்லை. உபன்யாஸம் 6-30க்கு துவங்கியது. இன்று ஸ்ரீஅலமேலுமங்கா தாயார் திருக்கல்யாணம். உபன்யாசம் மிக அருமை. சாவித்திரி முதல்முதலாக விஷாகா ஹரியை நேரில் கேட்கிறாள். 8-45க்கு முடிந்தது. இன்று தொன்னை நிறைய நெய் வழியும் கற்கண்டு சாதமும், சுண்டலும்.

9-6-2008 திங்கள்கிழமை - இன்றைய உபன்யாஸத்திற்க்குப் போக முடியவில்லை. காலையில் சவீதா ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது மணி 2-30க்கு மேல் ஆகிவிட்டது. மூன்று பேருமே களைத்து விட்டோம்.

இரண்டு நாட்களாக விஷாகாவின் சொற்பொழிவைக் கேட்டதில் மனசுக்கு என்ன ஒரு நிம்மதி! Wonderful Experience. தெய்வீக அனுபவம்.

ராஜப்பா
10-6-2008 மாலை 4 மணி

Comments

Anonymous said…
Very nice information about Visaha Hari's mahanyasam. It induces us to know about that.
My humble request is, in this valuable blog, no need of information about SUDA SUDA NEI Sottum Karkandu sadham, Sundal, etc... There are some more blogs which u r maintaining it. Anyway, otherwise it is nice blog.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...