மாவிளக்கு மாவிளக்கு போடுவது என்பது நம் குடும்பத்தில் தொன்றுதொட்டு வரும் பழைமையான ஒரு சம்பிரதாயம். நம் அம்மா சொல்லிக் கொடுத்த ஒரு நல்ல வழக்கம். நம் குலதெய்வம் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் மற்றும் ஸ்ரீ வைத்தியநாதஸ்வாமி என்பதால் புரட்டாசி மாஸம் சனிக்கிழமையன்று மாவிளக்கு வீட்டில் ஏற்றுவது என்பது வழக்கம். ஆடி மாஸம் மற்றும் தை மாஸம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவதும் வழக்கம். சிற்றஞ்சிறு காலே எழுந்து, குளித்து, வீட்டையும் ஸ்வாமி பிறையையும் நன்கு அலம்பி, கோலம் போட்டு, ஒரு சுத்தமான தாம்பாளத்தில் மாவிளக்கு போட வேண்டும். அரிசியைக் களைந்து சுத்தப்படுத்திய பின், மாவாக அதை அரைத்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து மாவில் நன்கு கலக்கவும். நடுவில் விளக்கு போல் குழித்து, திரி போட்டு, நிறைய நெய் விட்டு, விளக்கை ஏற்றவும். அம்மனுக்காக என்றால் இரண்டும், ஸ்வாமிக்காக (புரட்டாசி சனிக்கிழமை) என்றால் ஒரு விளக்கும் ஏற்ற வேண்டும். புஷ்பங்கள் சாற்றி, வெற்றிலை, பழம், தேங்காய் நைவேத்யத்துடன் ஒரு பாயஸமும் செய்து ஸ்வாமிக்கு / அம்மனுக்கு நைவேத்யம் பண்ணலாம். தூப, தீப, கற்பூர தீபாராதனை செய்து, நமஸ்காரம் செய்யவேண...