Skip to main content

அன்னதானம் Annadhaanam

அன்னதானம். ANNADHAANAM

பல ஊர்களிலே, பல கோயில்களிலே, பல இடங்களிலே அன்னதானம் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். இந்தப் பதிவு அதைக் குறித்து அல்ல.

மயிலாப்பூர் ஸ்ரீசாய்பாபா கோயிலில் என்றைக்குப் போனாலும் எப்போது போனாலும் இரவானாலும், பகலானாலும் உங்களுக்கு தொன்னை நிறைய சுடச் சுட வெண்பொங்கலோ, சக்கரைப் பொங்கலோ, புளியோதரையோ, தயிர் சாதமோ கிடைப்பது நிச்சயம்.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் (Mar-Apr) மயிலாப்பூர் கோயிலில் உத்சவம் நடைபெறும் - அறுபத்துமூவர் விழாவன்று RK Mutt ரோட்டில் ஸ்வாமி ஹால் தொடங்கி, இரண்டு கிமீ தூரத்திற்கு பத்தடிக்கொன்றாக சிறுசிறு "அன்னதான ஸ்டால்கள்" போட்டு, எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவார்கள். வழங்குபவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான்.

ஸ்ரீராமகிருஷ்ண மடம் முன்பாகவும், மந்தைவெளி பஸ் டிப்போ அருகிலும் இலை நிறைய இரண்டு விதமான சாப்பாடு வழங்குவார்கள்.

இதற்கு 2-3 நாட்கள் முன்பாக நடக்கும் திருத்தேர் விழாவின்போது, வீடு தோறும் தங்களால் முடிந்த அளவு சாப்பாடு கொடுப்பார்கள்.

இதுபோன்று, சென்னையில் நூற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வாழும் சாதாரண மக்கள் அளிக்கும் அன்னதானம் பற்றி எழுத இயலாது! சுனாமி என்று கேட்டதும் அடுத்த மணிக்குள் பெரிய பெரிய பாத்திரங்கள் நிறைய சாப்பாடு வந்து குவிந்தது - பெஸண்ட்நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலில்!நிர்வாகத்தினரே மூச்சுமுட்டி, வேண்டாம், வேண்டாம் என அவசரக்குரல் கொடுக்க வேண்டியதாயிற்று.

சென்னையில் மட்டும்தானா, தமிழ்நாடு, ஏன் பாரத தேசம் முழுதுமே இது போன்று பரிவு சிந்தனைகொண்ட மக்கள் லக்ஷக்கணக்கில் இருக்கிறார்கள். திருவண்ணாமலை தீபமா, மதுரை கள்ளழகர் உத்சவமா, மீனாக்ஷி திருக்கல்யாணமா, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கனுக்கு உத்சவமா, சபரிமலையில்
மகரஜோதியா, எங்கும் அன்னதானம்தான் - அதுவும் சாதாரண மக்களால்.

சென்ற 2008 ஆண்டு இறுதியில் திருமலா கோயில் நிர்வாகத்தினர் தினம் தினம் 5-6 லக்ஷம் பேருக்கு இலவசமாக முழுச் சாப்பாடு அளித்தனர் - என்ன ஒரு பரிவு. ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், மந்திராலயம் போன்ற ஊர்களில் போவோர்க்களுக்கெல்லாம் (நூற்றுக்கணக்கில்) தினம் தினம் இலை போட்டு அன்னமிடுகிறார்கள். விநாயகர் விழாவின் போது (குறிப்பாக, விநாயகர் விஸர்ஜன் அன்று,) ஊர்வலமாகப் போகும் ஒவ்வொரு விநாயகர் வண்டியிலும் பெரிய பெரிய பாத்திரங்கள் நிறைய புளியோதரையும், தயிர் சாதமும் எடுத்துப் போய் ரோட்டில் உள்ள ஆயிரக்கணக்கானோர்க்கு வாரி வாரி வழங்குவார்கள்.

இதேபோன்று மும்பையிலும், புனேவிலேயும் பார்த்திருக்கிறேன்.

கர்நாடகாவிலும் பல கோயில்களில் ஆயிரக்கணக்கானோர்க்கு பந்தி அமர்த்தி விருந்து படைக்கின்றனர்.

இந்தியா ஏழை நாடு, இங்கிருப்பவர்கள் வறியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், அன்னதான விஷயத்தில் நாம் மிகமிக உயர்ந்தவர்கள். நெஞ்சினில் ஈரம் கொண்டவர்கள்.

ராஜப்பா
16-01-2009, 7-15PM

Comments

I liked it very much. Though you said whole of India, specific mention to Punjab was missing. You must have seen it when you came to visit Amritsar with us. The Langars are always there on 24 hrs basis in big Gurudwara like Amritsar, Anandpur Sahib & Manikaran (Manali) and 3 times a day in all other medium / small gurudwaras. As you said rightly, these are organised, prepared and distributed by normal people like us. Jai Hind
Anonymous said…
It's very very good article and nice thought.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை.
யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும்.

ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும்.

பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது .

த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது. 


சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று அவசிய…

Back to School - After 46 years - The DAY

It was in the air for many weeks; I wrote about it in October 2011. The momentum gathered fast when the HINDU met 5 at Vadapalani and published the meet with a large photo. [read]

The day was Sunday, the 4th Dec 2011. Vijaya got up by 4-30 AM and left house by 5-45. Arun dropped her at TNagar bus terminus. Boarded the bus at 0610 for Kanchipuram and she reached there by 8-15. Arrived in Sri Kamakshi Amman Koil and waited.

Ladies of the 1965-class of Somasundara Kanya Vidyalaya (SSKV) Kanchipuram started arriving, and the next 30 minutes saw over 40 assembling. A few had seen the HINDU article and joined the group. After darshan of the Amman, and an archanai later, they ambled to their old alma mater nearby. It was an emotional meet, seeing one another after 46 years, not able to recognise anyone at the first sight. Time had transformed everyone, from bubbly, bouncing and beautiful young lasses of 16 and 17 years, to matured, grown-up and withered grandmothers of 62 and 63 years. Indeed, …

தமிழ் சினிமா பழைய பாடல்கள்

VINTAGE SONGS FROM TAMIL FILMS


25-04-2009 சனிக்கிழமை. காலையில் மயிலாப்பூர் டைம்ஸ் பார்த்ததுமே, முடிவெடுத்து விட்டோம் - சாயங்காலம் PS High School-க்கு போவோம் என.

பழைய தமிழ் சினிமாப் பாடல்களை வீடியோவில் காண்பிக்க இருப்பதாக அந்த அறிவிப்பு சொன்னது. மாலை 6-10க்கு ஹாலுக்குப் போய்விட்டோம் - கூட்டம் அவ்வளவு இருக்காது என எண்ணிய எனக்கு, வியப்பு - 120க்கும் மேலாக வந்திருந்தனர். Dr சுதா சேஷய்யனுக்குக் கூட இவ்வளவு பேர் வரவில்லை, போன வாரம்.

1940-50 களில் வந்த தமிழ் சினிமா பாடல்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது - சிவகவியில் (1943) MK தியாகராஜ பாகவதரின் வஸந்த ருதுதான் முதல் பாட்டு. பின்னர் சகுந்தலையில் GNBயும் MS-ம் சேர்ந்து பாடிய பாட்டு. MS எவ்வளவு இளமையாக காணப்படுகிறார்! ஜெமினியின் அபூர்வ சகோதரர்களிலிருந்து பானுமதி பாடிய “ஆடுவோமே, கீதம் பாடுவோமே” அடுத்த பாட்டு.

நீல வானும் நிலவும் போல” -இது பொன்முடி பாட்டு. பின்பு இதயகீதம் பட பாட்டு. மந்திரிகுமாரி படத்தின் புகழ்பெற்ற “ உலவும் தென்றல் ஓடம் இதே...” க்குபிறகு, வனசுந்தரி படப்பாட்டு. பாதாளபைரவியின் “காதலே தெய்வீக காதலே” தொடர்ந்தது.

வான் மீதிலே, இன்பத்தேன் மாரி…