சீஸனுக்கு ஏற்றவாறு ஊறுகாய்கள் போடுவதில் விஜயா மிகவும் திறமைசாலி. முன்வைத்த காலை பின்வாங்காமல் “கருமமே கண்ணாயினார்” என்பதற்கேற்ப எப்படியும் ஊறுகாய்களை போட்டுவிடுவாள். # 1 மாவடு வெயிற்காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாஸத்தில் தெற்கு மாடவீதியில் மாவடுக்கள் கொட்டி இருக்கும். அந்தக் கடைகளைத் தாண்டி செல்லும்போது அவள் கண்கள் மின்னும். முதலில் சில நாட்கள் சும்மா பார்த்து விட்டு, ஒரு நாள் திடீரென முடிவெடுப்பாள். அன்று வாங்கிவிடுவாள். அன்றிரவே ஊறுகாய்க்கான ஆரம்ப வேலைகள் நடக்கும். அடுத்த 5-ஆம் நாள் தயிர் / மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாவடு கிடைக்கும். இந்த வருஷம் (2009) மார்ச் 25-ஆம் தேதியன்று 5 படி (ரூ 20 / படி வீதம்) வாங்கி ஊறுகாய் போட்டாள்; பின்னர் ரமாவிற்கும் 5 படி வாங்கி ஹைதராபாத் அனுப்பினாள். # 2. ஆவக்காய் அருண், அர்விந்த், அஷோக், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சூடான சாதத்தில் ஆவக்காயைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் .... ஓ! நல்ல வெயில் காலத்தில்தான் மாங்காய்கள் கிடைக்கும். வழக்கமாக, கிருத்திகாவின் பெற்றோர் வீட்டிலிருந்து (அவர்கள் வீட்டில் மாமரம் உள்ளது) காய்கள் ...