Skip to main content

ஊறுகாய்கள் பலவிதம் ...

சீஸனுக்கு ஏற்றவாறு ஊறுகாய்கள் போடுவதில் விஜயா மிகவும் திறமைசாலி. முன்வைத்த காலை பின்வாங்காமல் “கருமமே கண்ணாயினார்” என்பதற்கேற்ப எப்படியும் ஊறுகாய்களை போட்டுவிடுவாள்.

# 1 மாவடு

வெயிற்காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாஸத்தில் தெற்கு மாடவீதியில் மாவடுக்கள் கொட்டி இருக்கும். அந்தக் கடைகளைத் தாண்டி செல்லும்போது அவள் கண்கள் மின்னும். முதலில் சில நாட்கள் சும்மா பார்த்து விட்டு, ஒரு நாள் திடீரென முடிவெடுப்பாள். அன்று வாங்கிவிடுவாள். அன்றிரவே ஊறுகாய்க்கான ஆரம்ப வேலைகள் நடக்கும். அடுத்த 5-ஆம் நாள் தயிர் / மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாவடு கிடைக்கும்.

இந்த வருஷம் (2009) மார்ச் 25-ஆம் தேதியன்று 5 படி (ரூ 20 / படி வீதம்) வாங்கி ஊறுகாய் போட்டாள்; பின்னர் ரமாவிற்கும் 5 படி வாங்கி ஹைதராபாத் அனுப்பினாள்.

# 2. ஆவக்காய்

அருண், அர்விந்த், அஷோக், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. சூடான சாதத்தில் ஆவக்காயைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் .... ஓ!

நல்ல வெயில் காலத்தில்தான் மாங்காய்கள் கிடைக்கும். வழக்கமாக, கிருத்திகாவின் பெற்றோர் வீட்டிலிருந்து (அவர்கள் வீட்டில் மாமரம் உள்ளது) காய்கள் வந்துவிடும். இந்த வருஷம் சரியாக காய்க்காததால், கடையில் போய் வாங்க வேண்டியதாயிற்று.

ஏப்ரல் மத்தியிலிருந்தே தெற்கு மாட வீதியில் மாங்காய் ராஜ்யம்தான். பொறுத்திருந்து பொறுத்திருந்து, கடைசியில் நேற்று (18 மே, 2009) சாயங்காலம் 24 மாங்காய்கள் வாங்கியே விட்டாள் (12 மாங்காய் ரூ 75.00). காய்களை வெட்டித் தருவதற்கு ரூ 50.00 தனி.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக, துண்டங்களை ஈரத்துணியால் துடைத்து, பின்னர் காய்ந்த துணியால் ஈரம் போக துடைத்து, உப்பு மிளகாய்ப் பொடி (ஹைதராபாத்திலிருந்து விசேஷமாக தருவிக்கப்பட்டது !), கடுகுப்பொடி, வெந்தயப் பொடி, நல்லெண்ணெய் சேர்த்து பிசறி வைத்து விட்டாள். 4-5 நாட்கள் ஊறியதும், இன்னும் தேவையான் உப்பு, மிளகாய்ப்பொடி, எண்ணெய் சேர்ப்பாள். 8-10 நாட்களுக்குப் பிறகு ஊறுகாய் ரெடி ..

# 3 மாகாளிக் கிழங்கு

எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. நவம்பர் - டிசம்பரில் கிடைக்கும். சென்ற வருஷம் 2008 டிசம்பர் 13 அன்று தெற்கு மாட வீதியில் 1 1/2 கிலோ மாகாளிக் கிழங்கு வாங்கி (ரூ 60 / கிலோ) ஊறுகாய் போட்டாள்.

இதற்கிடையில், எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் (நறுக்கி, துண்டமாகப் போடுவது), கடாரங்காய் ஊறுகாய் இவைகளையும் போட்டு விடுவாள்.

விஜயா பண்ணும் எல்லா ஊறுகாய்களுமே மணமாக, சுவையாக இருக்கும்.

ஊறுகாய்கள் பற்றிய எனது பழைய பதிவுகள்:

1. மாவடு
2. ஆவக்காய்
3. மாகாளிக் கிழங்கு

ராஜப்பா
7.00PM on 19 May 2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011