Skip to main content

Posts

Showing posts from August, 2009

மெரீனா கடற்கரை

ரொம்ப நாட்களாகவே எனக்குள் ஒரு ஆசை - மெரீனா கடற்கரை ஓர நடைபாதையில் நடக்க வேண்டும் என்பதே என் ஆசை. 2005-ல் கற்பகம் அவென்யூவிற்கு வந்ததுமுதல் இந்த ஆசை மீண்டும் துளிர்விடத் துவங்கியது. மாலை வேளைகளில் பலமுறை சென்றிருக்கிறேன்; காலை வேளையில்?இன்றுவரை போக இயலவில்லை. இன்று (30-08-2009) காலை 6-40க்கு பீச்சுக்கு கிளம்பினேன்; 6 மணிக்கே போக வேண்டும் என்ற என் எண்ணம் 40 நிமிஷம் பின்தங்கிவிட்டது. 6-50க்கு உழைப்பாளர் சிலை அருகில் இறங்கி, கண்ணகி சிலை வரை திருப்தியாக நடந்தேன். நடைபாதையை பளபளவென்று பண்ணியிருக்கிறார்கள். மனித இனத்தின் “kaleidoscope" என்று சொல்வார்களே, அதை - பலதரப்பட்ட மனிதர்களை அங்கு பார்க்க இயலும். நடக்க முடியாத வயதானவர்கள், காதில் iPod-டுடன் ஓடும் இளைஞர்கள், இளைஞிகள் சிரித்து பேசி விளையாடும் குழந்தைகள், கடல் மணலையே படுக்கையாக உறங்கும் ஏழைகள், கப்பல் போன்ற கார்களில் வரும் பணக்காரர்கள். மேலே தகதகவென காலை சூரியன், வங்கக் கடல் வீசும் லேசான கொண்டல் காற்று, சென்னை இன்னும் முழுதாக விழித்துக் கொள்ளாததால் ஆரவாரமற்ற காமராஜர் சாலை - ஓ, மிக ரம்மியமான சூழ்நிலை. 45 நிமிஷங்கள் நடந்தபின்னர், பஸ் பி...