ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது ஸ்கந்தத்தை அக்டோபர் 15-ஆம் தேதியன்று ஆரம்பித்தார். (இங்கு படிக்க) நேற்று (நவம்பர் 17-ஆம் தேதி இந்த 6-வது ஸ்கந்தம் நிறைவு பெற்றது. இன்று (18-11-2010) காலை அவர் 7-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 269-வது நாள். ஸ்கந்தம் 3-ல் பகவான் வராஹப் பெருமாளாக அவதரித்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றினார். இந்த ஹிரண்யாக்ஷனின் அண்ணா ஹிரண்யகசிபு பிரமனைக் குறித்து கடுந்தவம் புரிந்து, “சாகா வரம்” பெற்றான். வரம் பெற்றவுடன், மிகக் கொடூரமாக எல்லாரையும் கொன்று குவிக்க ஆரம்பித்தான். பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்து இவனை எப்படி சம்ஹாரம் செய்தார், இவனுடைய மகனான ப்ரஹ்லாதனின் அத்யந்த பக்திக்கு ஆட்பட்டு, குழந்தை அழைத்தவுடன் எப்படி தூணிலிருந்து தோன்றி ராக்ஷசனை கொன்றார் என்பது 7-வது ஸ்கந்தத்தில் விவரிக்கப் படுகிறது. கேட்தல், பாடுதல், சிந்தித்தல், திருவடிகளுக்கு தொண்டு புரிதல், அர்ச்சித்தல், வணங்குதல், அடிமை செய்தல், நட்போடு இருத்தல், ஆத்மாவை ஸமர்ப்பித்தல் - என்ற ஒன்பது விதமான பக்தியை ப்ரஹ்லாதன் உபதேசம் பண்ணுவதும் இந்த ஸ்கந்தத்தி...