கவரப்பட்டு என்னும் கிராமம் சிதம்பரத்திலிருந்து சுமார் 6-7 கிமீ தூரத்தில் உள்ளது. இதுதான் எங்கள் “சொந்த ஊர்” எங்கள் அப்பாவின் இனிஷியலான G என்பது இந்த கிராமத்தைத்தான் குறிக்கிறது. இங்கு எங்கள் தாத்தா (ராமசேஷ ஐயர்) வசித்து வந்தார். (அவர் காலமானதும் இங்குதான்) அவருக்கு முன்பு அவரது தந்தை - எங்கள் கொள்ளுத்தாத்தா ஸ்ரீமான் நடராஜ ஐயரும் இந்த கிராமத்தில் தான் வசித்திருக்க வேண்டும். எங்கள் தாத்தா ஸ்ரீமான் ராமசேஷ ஐயர் எங்கள் தாத்தா ஒரு ராமர் உருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்தப் படத்தை அவர் பின்னால் ஊருக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார். ஸ்ரீ ராம நவமியின் போது இந்தப் படத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். முதலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் வீடுகளில் நடைபெற்று வந்தது; பின்னர், கிராமத்து பக்தகோடிகள் பணம் திரட்டி ஒரு கட்டிடத்தை கட்டி அதில் ஸ்ரீராமரை வைத்து ராமநவமியை கொண்டாட ஆரம்பித்தனர். ராமர் மடம், கவரப்பட்டு 150 வருஷங்களாக இந்த ஸ்ரீராம நவமி உத்ஸவம் கவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு (2011) 151-வது உத்ஸவம். ஜனனோத்ஸவமாக ஸ்ரீராம நவமி திதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறத...