Skip to main content

Gruha Pravesam - 17 April 2011 (Arun)

சென்னை அடையாரிலிருந்து 25 கிமீ தூரத்தில் OMR எனப்படும் பழைய மஹாபலிபுரம் ரோடில் (now, Rajiv Gandhi Salai) உள்ள படூர்  என்னும் இடத்தில், அருண் ஒரு 2 BHK Flat க்கு முன்பதிவு செய்தான். இதற்கான பதிவு (Registration) 19-11-2009 அன்று திருப்போரூர் என்னும் ஊரில் (படூரிலிருந்து மஹாபலிபுரம் நோக்கி இன்னும் 10 கிமீ தூரம்) sub-registrar அலுவலகத்தில் நடந்தது (விவரங்கள் இங்கே)

வீடு கட்டி முடித்தபின் வீட்டிற்கான சாவி ஏப்ரல் 2011-ல் அருணிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே க்ருஹ ப்ரவேஸத்திற்கான முஹூர்த்தம் ஃபிப்ரவரி 16 என நிச்சயிக்கப்பட்டு இருந்தது; ஆனால், சாவி கிடைக்காததால், முஹூர்த்தம் ஏப்ரல் 17, 2011 (ஞாயிற்றுக்கிழமை) என மீண்டும் நிச்சயிக்கப்பட்டது.
கிருஹப் ப்ரவேஸத்திற்கான வேலைகள் முழுமூச்சுடன் ஆரம்பிக்கப் பட்டன்; எல்லாரையும் ஃபோன் மூலமே அருண் - காயத்ரி அழைத்தனர். அருகிலுள்ள ஓரிருவரை மட்டும் நேரில் சென்று அழைத்தனர். சாஸ்திரிகள், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய உடைகள் வாங்கப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன, முஹூர்த்தமும் வந்தது.

ஏப்ரல் 16 (சனிக்கிழமை) புது வீட்டிற்கு காயத்ரி சென்று வீட்டைப் பெருக்கி, அலம்பி, கோலம் போட்டுவிட்டு வந்தாள். ஞாயிறு (17) காலை 4-15க்கே எழுந்து, குளித்து அருண் வீட்டிற்குப் போய் எல்லாருமாக 3 கார்களில் ப்டூர் போனோம். அஷோக் மட்டும் (பெங்களூரிலிருந்து) சனிக்கிழமை இரவு வந்தான். வயிற்று வலி காரணமாக நீரஜாவால் வர இயலவில்லை.

பாலு மாமா, மாமி அவர்கள் உறவினர்கள் 7-30க்கு வந்தனர். சாஸ்திரிகளும் வந்து, 7-40க்கு கோ-பூஜை வீட்டின் கீழ்தளத்தில் ஆரம்பித்தனர். பின்னர் எல்லாரும் 2-வது மாடியில் உள்ள புதுவீட்டினுள் வலதுகால் வைத்து நுழைந்தோம். ஹோமங்கள் ஆரம்பித்தன.



பின்னர் காயத்ரி பால் காய்ச்சினாள். ஹோமங்கள் முடியும்போது மணி 1000 இருக்கும்.





அடுத்து, உணவு. சுமார் 73 பேருக்கும் மேலாக வந்திருந்தனர். இலை போட்டு பரிமாறாமலும், buffet என சொல்ல முடியாமலும் லஞ்ச் வழங்கப்பட்டது. பால் பாயஸம், குலோப் ஜாமூன், புலவ், பச்சடி, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு, வடாம், ரசம், தயிர் சாதம், தயிர் வடை, உ.கிழங்கு கறி ஆகியவை பரிமாறப்பட்டன. நன்றாக ருசியாக இருந்தன.

வீட்டை ஒழித்து, சுத்தம் பண்ணி, அங்கிருந்து நாங்கள் (கடைசியாக) கிளம்பும்போது மணி 1:00. இவ்வாறாக, அருண் - காயத்ரியின் புது வீட்டு கிருஹப் ப்ரவேஸம் மிக நன்றாக நடந்தேறியது.

பத்மா, பிரகாஷ், ராஜேஸ்வரி, சரோஜா-அத்திம்பேர், ரமேஷ் மற்றும் குடும்பத்தினர், சுகவனம், சுதா-குடுமபம், விஜயராகவன், மாமி, பிரியா-ராஜேஷ், குழந்தை, கணபதி சுப்ரமணியம், மாமி, ஆகியோர் வந்தனர். பாலு மாமா பக்கத்திலிருந்து அவரது எல்லா உறவினர்களும் வந்தனர். மாமி பக்கத்திலிருந்து எல்லாரும் துறையூர் சென்று விட்டதால் ஒருவர் கூட வர இயலவில்லை.

சமையல் அறை, ஹால், இரண்டு அறைகள், இரண்டு குளியலறைகள் (ஒன்று தனியாக, இன்னொறு அறையினுள்) என வீடு சுமார் 850 ச அடியில் அமைந்துள்ளது.  மொத்தம் 4 மாடிகள்; அருண் வீடு இரண்டாவது மாடியில் உள்ளது. லிஃப்ட் இருக்கிறது. பக்கத்து ஃப்ளாட்டில் காயத்ரியின் பெரியப்பா-பெரியம்மா (பாலு மாமாவின் அண்ணா) இருக்கப் போகிறார்கள். ஒருத்தருக்கு இன்னொருத்தர் நல்ல துணை.


படூர் கொஞ்சம் தூரம் (அடையாரிலிருந்து 25 கிமீ). நிறைய அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்த வண்ணம் உள்ளன.

அருண்-காயத்ரி-ஸௌம்யா-ஸ்ரீராம் புது வீட்டிற்கு வரும் மே மாஸ கடைசியில் குடி போவார்கள்.

 விழா நல்லமுறையில் நடந்தேறியது ஆண்டவன் அருளே. அருணையும் அவன் குடும்பத்தையும் ஆண்டவன் ஆசீர்வதிக்க்கட்டும்

ராஜப்பா
11:15 மணி
18-04-2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை