10வது ஸ்கந்தம் - பகுதி 3 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த ஸ்கந்தம் மிக நீளமானதால் (மொத்தம் 90 அத்தியாயங்கள் உள்ளன) இதை நான் மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். இது 3-வது பகுதி. ஜராசந்தன் வதம் : ஸ்ரீகிருஷ்ணன் இந்திரப்ப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுடன் இருந்தார். ஜராசந்தனை அழிக்க பீமனை கருவியாக்கிக் கொண்டு, பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தார். (10:72) பாண்டவர்கள் (தர்மபுத்திரர்) செய்த ராஜஸுய யாகத்தில் முதல் நமஸ்காரம் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தான் செய்ய வேண்டும் என பாண்டவர்கள் விரும்பினார்கள்; ஆனால், சிசுபாலன் இதை எதிர்த்தான்.(10:73) ராஜஸுய யாகம் இங்கு நன்கு விளக்கி சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் அரண்மனையில் புகுந்த துரியோதனன் தண்ணீர் இல்லாத இடத்தில் தண்ணீர் இருப்பதாக நினைத்து நடந்ததையும், தண்ணீர் இருந்த இடத்தில் இல்லையென்று எண்ணி, வழுக்கி விழுந்ததையும் பார்த்து பீமன், திரௌபதி முதலானோர் அவனை பார்த்து சிரித்தனர். (10:75) சால்வா என்ற அ...