Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 2 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10 வது ஸ்கந்தம் பகுதி 2

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன.

மறுநாள் காலை கம்ஸனுடைய அரண்மனை சென்றபோது அங்கிருந்த குவலயாபீடம் என்னும் பெருத்த யானையை வீசி எறிந்து முடித்தான். பின்னர் 5 மாமல்லர்களையும் அழித்து முடித்தான். (10:43)

கம்ஸவதம் : முதலில் சனூரா என்ற அசுரனுக்கும் கண்ணனுக்கும் மாபெரும் மல்யுத்தம் நடந்தது. பலராமன் முஷ்டிகா என்ற அசுரனுடன் போரிட்டார். ஸ்ரீகிருஷ்ணன் சனூராவை அழித்து முடித்தார். சனூரா,முஷ்டிகா, குதா,சாலா, டோசாலா என்னும் பல அசுரர்கள் மாண்டார்கள். கடைசியில், கம்ஸனும் மாண்டான். (10:44)

ஸ்ரீகிருஷ்ணன் தன் தாய் தகப்பனாரை சிறையில் இருந்து விடுவித்து, உக்ரஸேனரை மீண்டும் மஹாராஜாவாக்கினார் (10:45)

கண்ணன் திரும்ப வராததால் மிகுந்த சோகத்தில் இருந்த நந்தனையும், யசோதாவையும் ஆறுதல் கூறி தேற்றுமாறு உத்தவரை வ்ரஜா பூமிக்கு அனுப்பினார். அவரும் அவ்வாறே செய்தார் (10:46). உத்தவர் மதுரா திரும்பினார். (10:47)

அக்ரூரர் ஹஸ்தினாபுரம் சென்று, அங்கு திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு இழைக்கும் அநீதியை கண்டார் (10:49)

கம்ஸனின் மனைவிகளான அஸ்தி, ப்ராப்தி இருவரும் ஜராசந்தனின் புத்திரிகள். இருவரும் தந்தையிடம் கிருஷ்ணன் கம்ஸனை கொன்றதை கூற, ஜராசந்தன் மதுரா நகர் மீது 17 முறை படையெடுத்தான். 17 முறையும் தோற்றோடினான். இவனிடமிருந்து தப்பிக்க ஸ்ரீகிருஷ்ணன் சமுத்திரத்தின் நடுவில் த்வாரகா என்னும் அழகிய நகரை நிர்மாணித்து, எல்லா யாதவர்களையும் அங்கு அழைத்துச் சென்றான். (10:51)

ருக்மிணி கல்யாணம் : விதர்ப நாட்டு மன்னனான பீஷ்மகா என்பவனுக்கு ருக்மி, ருக்மரதா, ருக்மபாஹு, ருக்மகேஸா, ருக்மமாலி என்ற 5 பிள்ளைகளும், ருக்மிணி என்ற ஒரு பெண்ணும் இருந்தனர். ருக்மிணிக்கு ஸ்ரீ கிருஷ்ணனை திருமணம் செய்து கொள்ள மிகுந்த ஆசை. ஆனால், அவளை சிசுபாலனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ருக்மிணி ஒரு பிராமணர் மூலம் 9 ஸ்லோகங்கள் எழுதி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள்.(10:52) இந்த சிசுபாலன் ருக்மிக்கு நெருக்கமான நண்பன்.

கண்ணனும் விதர்பா சென்று ருக்மிணியை தூக்கி வந்து திருமணம் செய்து கொண்டார்; துரத்தி வந்த பல அரசர்களை அழித்தார். (10:54)

ப்ரத்யும்னன் திருமணம்: சிவனால் சாம்பலாக்கப்பட்ட காமதேவன் ருக்மிணிக்கும் - ஸ்ரீகிருஷ்ணனுக்கும் மகனாகப் பிறந்தார். ப்ரத்யும்னன் என்று பெயரிட்டனர். 10 நாள் குழந்தையாக இருந்தபோதே இவனை சாம்பரா என்னும் அசுரன் தூக்கிச்சென்று கடலில் வீசி எறிந்தான்.கடலில் ஒரு மீன் குழந்தையை விழுங்கியது; மீனைப் பிடித்த மீனவன் இதை அரசன் வீட்டில் கொடுத்தான்; மீனை நறுக்கும்போது குழந்தையை கண்டு அரசகுமாரி (ரதிதேவி என பெயர்) வளர்க்க ஆரம்பித்தாள்.இவனை அந்த அரசகுமாரி ரதி தேவி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்; “வளர்த்த தாயை தான் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும்?” என ப்ரத்யும்னன் கேட்க, ரதிதேவி தங்கள் பூர்வ ஜன்ம கதையை கூறினாள். ப்ரத்யும்னனும் சாம்பராவை அழித்து, ரதி தேவியை திருமணம் செய்து கொண்டு த்வாரகைக்கு திரும்பினார் (10:55).

சத்யபாமா கல்யாணம்: ஸ்யாமண்டகா என்ற வைரக்கல்லை திருப்பி கொடுத்தது; சட்ராஜித்தின் பெண்ணான சத்யபாமாவை திருமணம் செய்து கொண்டது; (10:56)

காளிந்தி முதலான 5 இளவரசிகளை ஸ்ரீகிருஷ்ணா மணம் முடித்தது; (10:58)

சத்யபாமாவின் துணையோடு நரகாசுரனை வதம் செய்தது (10:59)

உஷா கல்யாணம்: பலி சக்கரவர்த்தியின் நூறு பிள்ளைகளில் மூத்தவன் பாணாசுரன் என்ற அசுரன். இவனுக்கு 1000 கைகள். இவனது பெண் உஷா. இவள் ஒரு இரவு தன் கனவில் ஒரு வாலிபனை பார்த்து அவனது அழகில் மயங்கி, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என உறுதியாக இருந்தாள். இவளது தோழி சித்ரலேகா என்பவள் சித்திரம் வரைவதில் வல்லவள். கனவில் கண்ட அந்த வாலிபனை உஷா விவரிக்க விவரிக்க, தோழி சித்ரலேகா அவனை படமாக வரைந்தாள். அவன் ப்ரத்யும்னனுக்கும் ரதிக்கும் பிறந்தவனும், ஸ்ரீ கிருஷ்ணனின் பேரனுமான அனிருத்தன். சித்ரலேகா ஆகாச மார்க்கமாக த்வாரகை சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த அனிருத்தனை தூக்கி வந்தாள். (10:62)

பாணாசுரனுடன் சண்டையிட்டு அவனது 996 கைகளை ஸ்ரீ கிருஷ்ணன் வெட்டி வீழ்த்தினார். உஷாவிற்கும் அனிருத்தனுக்கும் திருமணம் நடந்தது (10:63)

ராஜப்பா
17-11-2011
1000 காலை

***10 வது ஸ்கந்தம் இன்னும் தொடர்கிறது. -- பகுதி 3

பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது.



Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை