Skip to main content

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம்

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - பகுதி 2

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்

ஸ்ரீ ராமாயண உபன்யாஸத்தை வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2012-ஆம் வருஷம் மார்ச் 31ஆம் தேதியன்று சொல்ல ஆரம்பித்தார். பால காண்டத்தை முடித்து, அயோத்யா காண்டம் சொல்லி வருகிறார். இதன் முதல் பகுதியை 10 டிஸம்பர் 2012 அன்று எழுதினேன். 2-வது பகுதி இது :

ஸ்ரீராமரும், ஸீதையும், லக்ஷ்மணனும் காட்டிற்குப் போக தயாராகி விட்டதை அப்போது பார்த்தோம் ஸர்கம் 2 ஸ்லோகம் 31 - இனி - ஜனக மஹாராஜா அன்புடன் அளித்த தெய்வீக வில்,அம்பு, கத்திகளை எடுத்து வர லக்ஷ்மணனை பணிக்கிறான்.

வேத விற்பன்னர்களிடம் விடைபெற்றுக் கொள்கிறான். அவர்களுக்கு ஏராளமான பசுக்களை தானம் அளிக்கிறான்; அவர்களும் அவனை வாழ்த்தி வழியனுப்புகிறார்கள்.

தந்தை தஸரதனிடம் விடை பெற அங்கு செல்கிறான். அந்த ஒரு இரவாவது தன்னுடன் தங்குமாறு தசரதன் கேட்க, மறுக்கிறான். ராமன் புறப்பட, தசரதன் மூர்ச்சையாகிறான் (2:34)

மரவுரிகளை அணிந்து கொண்டு புறப்படுகிறார்கள். கைகேயி கொஞ்சம் கூட மனம் இரங்கவில்லை; தசரதனும், கௌஸல்யாவும் மற்ற ராணிகளும் அழுகிறார்கள்.

சுமந்திரன் தேர் கொண்டு வருகிறான். கௌஸல்யை ஸீதாவிற்கு பல புத்திமதிகள் கூறுகிறாள் (2:39).

ராமர் காட்டிற்கு கிளம்பியதும் தசரதன் துக்கம் தாளாமல் அழுகிறான்; கௌஸல்யா, சுமித்ரா ஆகியோர் அவனுக்கு ஆறுதல் கூறுகின்றனர் (2:43)

காட்டில் முதலில் தமஸா என்னும் ஆற்றை வந்து அடைகிறார்கள். அதுவரை கூடவே வந்த அயோத்யா நகர மக்களை ஏமாற்றி, ஆற்றைக் கடந்து செல்கிறான்; மக்கள் நகரம் திரும்புகின்றனர். (2:47)

வேதஸ்ருதி, கோமதி, ஸ்யந்திகா ஆகிய ஆறுகளை கடக்கிறான். அயோத்யாவிற்கு வணங்கி விடை சொல்லிவிட்டு, கடைசியாக கங்கை நதிக்கு வருகிறான். குகன் சந்திப்பு நிகழ்கிறது. (2:51)

குகன் கொண்டுவந்த படகில் ஏறி கங்கா நதியை கடக்கிறார்கள். கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடத்தில் உள்ள பரத்வாஜர் ஆஸ்ரமத்தை அடைகிறார்கள். அடுத்த நாள் காலையில் சித்ரகூடம் நோக்கி புறப்படுகிறார்கள். (2:54)

யமுனை நதியை கடந்து சித்ரகூடம் செல்ல வேண்டும். படகில் செல்கிறார்கள். சித்ரகூட மலையையும், அதன் வனாந்திர வளமையையும் ரசித்து விட்டு, அங்குள்ள வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைகின்றனர். அங்கு ஒரு குடிலை அமைத்துக் கொண்டு அங்கு தங்குகின்றனர். (2:56)

ராமர் சித்ரகூடம் சென்றதை அறிந்த தசரதன் மீண்டும் மூர்ச்சையாகிறான். தேறுதல், ஆறுதல் கூறியும் கௌஸல்யா சமாதானம் ஆகவில்லை.

மறுநாள் காலை, தஸரதன் தன் கடந்த கால செய்தி ஒன்றை கௌஸல்யாவிடம் விவரிக்கிறான். (2:63,64) எப்படி தான் வேட்டையாட சென்றபோது, யானை தண்ணீர் குடிக்கிறது என்று தவறாக எண்ணி, ஒரு சிறுவனை தான் அம்பு எய்து கொன்றதையும், அந்த சிறுவனின் கண் தெரியாத வயதான் பெற்றோர் அவனுக்கு சாபம் இட்டதையும் கூறி, அழுது அரற்றி, தஸரதன் மரணமடைகிறான். (2:64)

அயோத்யா காண்டம் இன்னும் தொடரும். [2:64 என்பதில் 2 என்பது காண்டத்தையும், 64 என்பது ஸர்கத்தையும் குறிக்கும்]

ராஜப்பா
11:15 காலை
23-02-2013











Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை