ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி இன்று (20 மார்ச்) காலை பாங்கிற்கு (Bank) கிளம்பினோம். நடுவழியில்தான் தெரிந்தது, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அதிகார நந்தி என்பதும், போக்குவரத்து பல இடங்களில் திருப்பி விடப்படுகிறது என்பதும். பஸ்ஸை மந்தவெளி போஸ்ட் ஆஃபீஸ் அருகில் நிறுத்தி விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். தெற்கு மாட வீதி முனையில் (குமரன் கடை அருகில்) பெரிய பந்தல் போட்டு, ஸ்வாமி-அம்மனை அங்கு எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். என்ன அழகான அலங்காரம் ! காண கண் கோடி வேண்டும். இன்று என்ன தவம் பண்ணினோமோ, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வழிபட்டோம். புண்ணியம். நாலு வருஷங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பகம் அவென்யூவில் இருந்த போது, இதே பங்குனியில் விடியற்காலம் கோயில் சென்று ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரனை அதிகார நந்தியில் வணங்கி வழிபட்டோம். இன்றும், கூட்டமான கூட்டம்; திருஞான சம்பந்தருக்கு திருமுலைப் பால் வழங்கிய உத்ஸவமும் இன்று இருந்தபடியால், பல இடங்களில் பக்தர்களுக்கு சூடான பால் கொடுத்தார்கள். நிறைய பெண்மணிகள் கைகளில் தட்டு தட்டாக பக்ஷணங்கள், பழங்கள், புஷ்பம் போன்ற பல சீர்வரிசைகளை ஏந்தி, ம...