ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினம்தோறும் காலை 06:30 க்கு ராமாயணம் உபன்யாஸம் செய்து வருகிறார். 23/02/2013 அன்று நான் அயோத்யா காண்டம் 64வது ஸர்கம் எழுதினேன். அதன் தொடர்ச்சி. துக்கம் தாளாமல் தசரத மஹாராஜா இறந்து போகிறார். செய்தி கேட்ட கௌஸல்யா தேவி அழுது அரற்றி கைகேயியை திட்டுகிறாள். அரசன் இல்லாமல் ஒரு நாடு இருக்கக் கூடாது என சொல்லி, வஸிஷ்டர் ஒரு புதிய அரசனிற்கு முடிசூட்ட எண்ணுகிறார். பரதனை கூட்டி வர ஆட்களை அனுப்புகிறார் [ஸர்கம் 65 - 68] அவர் அனுப்பிய ஆட்களும் பரதன் இருப்பிடத்துக்கு செல்கிறார்கள். கேகேய ராஜாவிடம் பரதனை அனுப்புமாறு விண்ணப்பிக்கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். பரதனும் அயோத்யா செல்கிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து அவன் மிகவும் துக்கப்படுகிறான். [ 69 - 72 ] தன அம்மா கைகேயியை திட்டுகிறான். ராமன் தான் ராஜா, நான் அவனை கூட்டி வருவேன் என சொல்கிறான். தந்தை தசரதனுக்கு சரயு நதி தீரத்தில் இறுதி சடங்குகளை செவ்வனே செய்து முடிக்கிறான். {72 -76] பட்டம் வேண்டாம் என மறுத்து விட்டு, ராமனை கூட்டி வர சுமந்திரனுடனும் சேனைகளுடனும் காடு நோக்கி புறப்படுகிறான். சேனைகள...