Skip to main content

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - 3வது பகுதி

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினம்தோறும் காலை 06:30 க்கு ராமாயணம் உபன்யாஸம் செய்து வருகிறார். 23/02/2013 அன்று நான் அயோத்யா காண்டம் 64வது ஸர்கம் எழுதினேன். அதன் தொடர்ச்சி.

துக்கம் தாளாமல் தசரத மஹாராஜா இறந்து போகிறார். செய்தி கேட்ட கௌஸல்யா தேவி அழுது அரற்றி கைகேயியை திட்டுகிறாள். அரசன் இல்லாமல் ஒரு நாடு இருக்கக் கூடாது என சொல்லி, வஸிஷ்டர் ஒரு புதிய அரசனிற்கு முடிசூட்ட எண்ணுகிறார். பரதனை கூட்டி வர ஆட்களை அனுப்புகிறார் [ஸர்கம் 65 - 68]

அவர் அனுப்பிய ஆட்களும் பரதன் இருப்பிடத்துக்கு செல்கிறார்கள். கேகேய ராஜாவிடம் பரதனை அனுப்புமாறு விண்ணப்பிக்கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். பரதனும் அயோத்யா செல்கிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து அவன் மிகவும் துக்கப்படுகிறான். [ 69 - 72 ]

தன அம்மா கைகேயியை திட்டுகிறான். ராமன் தான் ராஜா, நான் அவனை கூட்டி வருவேன் என சொல்கிறான். தந்தை தசரதனுக்கு சரயு நதி தீரத்தில் இறுதி சடங்குகளை செவ்வனே செய்து முடிக்கிறான். {72 -76]

பட்டம் வேண்டாம் என மறுத்து விட்டு, ராமனை கூட்டி வர சுமந்திரனுடனும் சேனைகளுடனும் காடு நோக்கி புறப்படுகிறான். சேனைகளை கண்ட குகன் கோபமுற்று போருக்கு ஆயத்தமாகிறான்; இருந்தாலும், ராமனது தம்பி என்பதால், அவன் பரதனுக்கு தேன், மாமிசம், மீன் ஆகியவற்றை அளித்து உபசரிக்கிறான். பரதனும் மனமகிழ்கிறான். [77 - 84]

பாரத்வாஜ ரிஷியின் ஆஸ்ரமத்திற்கு குகனிடம் வழி கேட்கிறான். ராமன் தற்போது இருக்கும் நிலைக்கு வருந்துகிறான். பரதன் கங்கையை கடக்க குகன் 500 படகுகளைத் தந்து உதவுகிறான். பாரத்வாஜ ரிஷியை வணங்கி பரதன் ராமனின் இருப்பிடம் குறித்து விசாரிகிறான். [85 - 90]

சித்ரகூட மலையில் இருக்கும் ராமன் சீதையிடம் அந்த மலையின் அழகையும், மந்தாகினி ஆற்றின் அழகையும் விவரிக்கிறான். சித்ரகூடம் செல்ல வழி அறிந்த பரதன் அங்கு விரைகிறான். மந்தாகினி ஆற்றைக் கடந்து அங்கு செல்கிறான். சேனையை விட்டு விட்டு தான் மட்டும் சுமந்திரன், த்ருதி ஆகியோருடன் ராமன் இருப்பிடம் செல்கிறான். [91-95]

பரதன் சேனையுடன் வருவதை பார்த்து லக்ஷ்மணன் ஆவேசப்படுகிறான். அவனை ராமன் ஆஸ்வாஸப்படுத்துகிறார். பரதனும் குகனும் ராமனின் வீட்டை தேடுகிறார்கள். ஒரு குடிலிலிருந்து புகை வருவதை பார்த்த பரதன் அங்கு விரைகிறான். ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரை பார்த்து பரதன் மகிழ்கிறான். [96-99]

ஒரு அரசனது கடமைகளை ராமன் அவனுக்கு விவரித்து சொல்கிறான். தன் தாயார் கௌஸல்யாவையும் தேற்றுகிறான். தன் தந்தை மரணத்தை பரதன் மூலம் அறிந்து, மூர்ச்சையாகிறான்; பின்னர் மந்தாகினி நதியில் அவரது இறுதி சடங்குகளை அவனும் செய்கிறான். தந்தை சொல்லை தட்டாதெ என பரதனுக்கு அறிவுறுத்துகிறான்; நாட்டிற்கு திரும்ப சொல்கிறான்; பரதன் அதை மறுக்கிறான். “மூத்த மகனுக்குத் தான் அரசாளும் உரிமை, கடமை,” என பரதன் மீண்டும் சொல்கிறான். [ 100 - 105]

பரதனும், வஸிஷ்டரும் என்ன சொல்லியும் ராமன் மறுக்கிறான்; தானும் பல காரணங்களை சொல்லி விளக்குகிறான். கடைசியில், பரதன் நாட்டுக்குத் திரும்ப சம்மதிக்கிறான். ராமனுடைய பாதுகைகளை தரும்படி அவன் கேட்க, ராமனும் தருகிறான். பாதுகைகளை தன் தலையில் சுமந்து சத்ருக்னனுடன் அயோத்யா திரும்புகிறான். அங்கிருந்து நந்திக்கிராமம் சென்று பாதுகைகளை அரச சிம்மாஸனத்தில் இருத்தி, தான் ஒரு ரிஷி போல அரச கடமைகளை செய்ய ஆரம்பிக்கிறான்.[106 - 115]

ராமன் சித்ரகூடத்திலிருந்து கிளம்பி அத்ரி ரிஷியின் ஆஸ்ரமத்தை சென்றடைகிறான். அவனை வரவேற்ற அத்ரி ரிஷி, தன் மனைவி அனஸுயாவிடம் ஸீதையை கூட்டிச் செல்லுமாறு ராமனை கேட்கிறார். [117]

”அப்படியே ஆகட்டும்” என சொல்லி, ஸீதையை அனஸுயாவிடம் உடனே செல்லுமாறு பணிக்கிறான். ஸீதையும் செல்கிறாள் - அனஸூயா தேவியை மூன்று முறை வலம் வந்து நமஸ்கரிக்கிறாள். [117- 16வது ஸ்லோகம்]

தன்னை பற்றி அனஸூயாவிடம் சொல்கிறாள் [117-17]. கூப்பிய கைகளோடு அன்ஸூயாவின் உடல்நலம் விசாரிக்கிறாள் [117-18]

ஒரு நல்ல மனைவியின் குணங்களை அனஸூயா ஸீதைக்கு விளக்குகிறாள் [ 117-19 முதல் 117-28]

ஸீதையின் பல நற்குணங்களை அறிந்த அனஸூயா அவளுக்கு பல பரிசுகளை வழங்குகிறாள். பின்னர் ஸீதையின் விவாஹம் குறித்த செய்திகளை வினவுகிறாள் [118-25]

”தான் எப்படி ஜனக மஹாராஜாவிற்கு புத்திரியாக கிடைத்தேன், எப்படி அவருடையா ஆசை மகளாக வளர்ந்தேன், எப்படி தன்னுடைய ஸ்வயம்வரம் நிகழ்ந்தது,” என பல விஷயங்களை ஸீதை அனஸூயாவிற்கு சொன்னாள். [118-26 முதல் 118-35 வரை]. இந்திரன் கொடுத்த வில்லைப் பற்றியும் சொல்கிறாள். [118-35 முதல் 118-43 வரை]

ராமன் வந்தது, வில்லை தூக்கி நாண் ஏற்றியது பற்றியும் சொல்கிறாள் [118-44 முதல் 118-48 வரை]. வில் உடைந்தது [118-49]

தசரத மஹாராஜாவின் பூரண சம்மதத்துடன் தன் விவாஹம் ராமனுடனும், த தங்கை ஊர்மிளாவின் விவாஹம் லக்ஷ்மணனுடனும் நடந்தது [118-52]

அனஸூயா தேவி அளித்த எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு, ஸீதை அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, ராமனை அடைகிறாள். ராமன், ஸீத, லக்ஷ்மணன் மூவரும் அன்று இரவை அங்கு கழித்து விட்டு, மறுநாள் காலை அவர்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

இத்துடன் அயோத்யா காண்டம் நிறைவு பெறுகிறது. மொத்த்ம் 119 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸவாமிகள் 2013, மே மாஸம் 24 வெள்ளிக்கிழமை அயோத்யா காண்டம் சொல்லி முடித்தார்.  297 வது தினம்.

மே மாஸம் 27 முதல் அரண்ய (ஆரண்ய) காண்டம் ஆரம்பித்தது. இதில் 75 ஸர்கங்கள் உள்ளன.

ராஜப்பா
27-5-2013











Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...