18-06-2013 செவ்வாய் கிழமை. விஜயா, நான், அர்விந்த், கிருத்திகா, அதிதி, அர்ஜுன் ஆகியோர் 18 ஜூன் 2013 அன்று சிதம்பரம் புறப்பட்டோம். கிருத்திகாவின் தகப்பனார் ஸ்ரீ கணபதி சுப்ரமணியம் அவர்களுக்கு 70-வது வயது பூர்த்தியாவதால் அவர் ஏற்பாடுகள் செய்தார். காலை 7-45க்கு ஒரு வேனில் புறப்பட்டோம். அர்விந்த் ஆகியோர் காரில் வந்தனர். நாங்கள் இருவர், TSG, மாமி, சரோஜா அக்கா, ராமமூர்த்தி அத்திம்பேர், இன்னும் சில நண்பர்கள் (TSG) என மொத்தம் 14 பேர் வேனில் சென்றோம். GST ரோடில் மாமண்டூர் என்னும் ஊரில் 9:30 மணிக்கு வேனை நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். அடுத்து, நெய்வேலி, வடலூர் வழியாக சிதம்பரம் அடைந்தோம். ஒரு நண்பரின் வீட்டில் உட்கார்ந்து, நாங்கள் எடுத்து சென்ற சாம்பார் சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிட்டோம். Caterer செய்து கொடுத்தார். பின்னர் ”ஹோட்டல் வாண்டயார்” - 7 அறைகள் எங்களுக்காக காத்திருந்தன. ஏஸி வசதியுடன். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றோம். தெற்கு கோபுரத்தின் அருகே உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அபிஷேகம். முடிந்ததும், ஒரு தீக்ஷிதர் வீட்டில் ஸ்வாமி ந...