Skip to main content

சிதம்பரம் சென்றோம்.20-06-2013

18-06-2013 செவ்வாய் கிழமை.

விஜயா, நான், அர்விந்த், கிருத்திகா, அதிதி, அர்ஜுன் ஆகியோர் 18 ஜூன் 2013 அன்று சிதம்பரம் புறப்பட்டோம். கிருத்திகாவின் தகப்பனார் ஸ்ரீ கணபதி சுப்ரமணியம் அவர்களுக்கு 70-வது வயது பூர்த்தியாவதால் அவர் ஏற்பாடுகள் செய்தார். காலை 7-45க்கு ஒரு வேனில் புறப்பட்டோம்.

அர்விந்த் ஆகியோர் காரில் வந்தனர். நாங்கள் இருவர், TSG, மாமி, சரோஜா அக்கா, ராமமூர்த்தி அத்திம்பேர், இன்னும் சில நண்பர்கள் (TSG) என மொத்தம் 14 பேர் வேனில் சென்றோம்.

GST ரோடில் மாமண்டூர் என்னும் ஊரில் 9:30 மணிக்கு வேனை நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். அடுத்து, நெய்வேலி, வடலூர் வழியாக சிதம்பரம் அடைந்தோம். ஒரு நண்பரின் வீட்டில் உட்கார்ந்து, நாங்கள் எடுத்து சென்ற சாம்பார் சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிட்டோம். Caterer செய்து கொடுத்தார்.

பின்னர் ”ஹோட்டல் வாண்டயார்” - 7 அறைகள் எங்களுக்காக காத்திருந்தன. ஏஸி வசதியுடன். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றோம். தெற்கு கோபுரத்தின் அருகே உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அபிஷேகம். 

முடிந்ததும், ஒரு தீக்ஷிதர் வீட்டில் ஸ்வாமி நைவேத்யங்களை சாப்பிட்டு, ஹோட்டல் திரும்பினோம்.

19-06-2013 புதன்கிழமை.

இன்று ஸ்ரீ நடராஜர் தரிஸனம்; முருகனுக்கு அபிஷேகம். தீக்ஷிதர் வீட்டில் சாப்பாடு. இன்று, உலக புகழ்பெற்ற சிதம்பரம் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும். ஹோட்டலில் ஓய்வு. மாலை 5 மணிக்கு நாங்கள் இருவர், அக்கா, அத்திம்பேர் என நால்வரும் வடக்கு கோபுரம் வழியாக போய் முருகன் கோயில், சிவகாமி அம்மன் கோயில் பார்த்து விட்டு வெளி பிராகாரத்தை சுற்றி வந்து, அங்கிருந்து தில்லை காளி அம்மன் கோயில் சென்றோம்.

அம்மனுக்கு அபிஷேகம். தீக்ஷிதர் வீட்டில் சாப்பாடு. ஹோட்டலில் ஓய்வு.

20-06-2013 வியாழக்கிழமை.

இன்றுதான் TSGயின் நக்ஷத்திரம். கோயிலில் ருத்ரம் சொன்னார்கள்; ஹோமம் நடைபெற்றது. நவக்கிரக ஹோமமும். பின்னர் TSG - மாமி மாலை மாற்றிக்கொணடனர். அவர்களுக்கு தலைக் குளியலும் நடந்தது. 1 மணிக்கு தீக்ஷிதர் வீட்டில் சாப்பாடு. அருமையான கல்கண்டு பொங்கல் என எல்லாரும் சொன்னார்கள். ஹோட்டலுக்கு வந்து, சாமான்களை எடுத்துக் கொண்டு மதியம் 3-25க்கு வேனில் சென்னை கிளம்பினோம்.

வழியில் கடலூரில் அடையாறு ஆனந்தபவனில் காஃபி குடித்து, சென்னை வீட்டை அடையும் போது இரவு 9:30 மணி. எங்கள் எல்லாருக்கும் அர்விந்த் சாப்பாடு வாங்கி வைத்திருந்தான். சாப்பிட்டு படுத்தோம்.

இப்படியாக, எங்கள் சிதம்பரம் பயணம் இனிதே நிறைவு பெற்றது. சிறப்பான ஏற்பாடுகள் செய்தமைக்கு ஸ்ரீ TS Ganapathy Subramaniam மற்றும் மாமிக்கு நன்றிகள்.

ராஜப்பா
22-06-2013

Tidbits:

  • Vandayar Hotel has been built where previously Sri Nataraja Theatre existed.
  • Room Rent is Rs. 2250.00 (breakfast is included)
  • Chidambaram autos charge Rs 40.00 as minimum.
  • Samba Saadam, and Gothsu were tasty.
  • Cuddalore Ananda Bhavan charges Rs. 20.00 for a cup of coffee or tea!




Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011