ஆரண்ய காண்டம் - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார். ராமர், ஸீதை, லக்ஷ்மணன் மூவரும் தண்டகாரண்யம் அடைந்து அங்குள்ள பல ரிஷிகளை வணங்கி வழிபட்டனர். அரண்யம் என்றால் “காடு”. அரண்யங்கள் ஞானத்தின் உறைவிடங்கள் என நம் முன்னோர் நம்பினர்; எனவேதான் இந்த காண்டத்திற்கு அரண்ய காண்டம் என பெயர் வந்தது. முதலில் விராட வதம் செய்தார். ராமர் அழித்த முதல் ராக்ஷசன். சரபங்க முனிவரை காப்பாற்ற இவனை அழித்தார். தீனஜன பரிரக்ஷணா வின் முதல் செய்கை. பின்னர் சரபங்க முனிவரை சந்தித்தனர். ராமனை சந்திப்பதற்காகவே முனிவர் காத்திருந்தார்; சந்தித்ததும் அவர் ராமனுக்கு அவன் எங்கே போகவேண்டும் என சொல்லிவிட்டு, யோக அக்னியில் விழுந்து ப்ரம்ஹாவிடம் போய் விடுகிறார். [ 2 - 5] மற்ற பல ரிஷிகள் ராமனை சந்தித்து ராக்ஷசர்களை அழிக்குமாறு விண்ணப்பிகின்றனர். ராமனும் சம்மதிக்கிறான். பின், சரபங்கர் சொன்னவாறே, சுதீக்க்ஷண முனிவரிடம் செல்கிறான். ஓரிரவு அவரது ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு அவர்கள் செல்கிறார்கள். ”அரக்கர்களை ஏன் அழிக்க வேண்டும்?, ” என்ற ஸீத...