Skip to main content

ஸ்ரீமத் ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 1

ஆரண்ய காண்டம்  - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார்.

ராமர், ஸீதை, லக்ஷ்மணன் மூவரும் தண்டகாரண்யம் அடைந்து அங்குள்ள பல ரிஷிகளை வணங்கி வழிபட்டனர். அரண்யம் என்றால் “காடு”. அரண்யங்கள் ஞானத்தின் உறைவிடங்கள் என நம் முன்னோர் நம்பினர்; எனவேதான் இந்த காண்டத்திற்கு அரண்ய காண்டம் என பெயர் வந்தது.

முதலில் விராட வதம் செய்தார். ராமர் அழித்த முதல் ராக்ஷசன். சரபங்க முனிவரை காப்பாற்ற இவனை அழித்தார். தீனஜன பரிரக்‌ஷணாவின் முதல் செய்கை. பின்னர் சரபங்க முனிவரை சந்தித்தனர். ராமனை சந்திப்பதற்காகவே முனிவர் காத்திருந்தார்; சந்தித்ததும் அவர்  ராமனுக்கு அவன் எங்கே போகவேண்டும் என சொல்லிவிட்டு, யோக அக்னியில் விழுந்து ப்ரம்ஹாவிடம் போய் விடுகிறார். [ 2 - 5]

மற்ற பல ரிஷிகள் ராமனை சந்தித்து ராக்ஷசர்களை அழிக்குமாறு விண்ணப்பிகின்றனர். ராமனும் சம்மதிக்கிறான். பின், சரபங்கர் சொன்னவாறே, சுதீக்க்ஷண முனிவரிடம் செல்கிறான். ஓரிரவு அவரது ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு அவர்கள் செல்கிறார்கள். ”அரக்கர்களை ஏன் அழிக்க வேண்டும்?, ” என்ற ஸீதையின் கேள்விக்கு பதிலளிக்கிறான். மீண்டும் சுதீக்க்ஷணரிடம் வந்து பல ரிஷிகளை சந்திக்கிறார்கள். இப்படியாக 10 ஆண்டுகள் ஓடுகின்றன. [ஸர்கம் 6 - 10]

பின்பு, அகஸ்திய முனிவரின் ஆஸ்ரமத்தை அடைகிறார்கள். ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிந்துள்ள அகஸ்தியர் அவர்களை வரவேற்று, ராமனுக்கு விஷ்ணுவின் ஒரு தெய்வீக வில்லையும், அம்புகள் என்றும் வற்றாத ஒரு அம்புராவையும், பொன் வாளையும் பரிசளிக்கிறார். [ஸர்கம் 11, 12]

தாங்கள் எங்கு தங்குவது என ராமன் கேட்க அகஸ்தியருக்கு வர இருக்கும் நிகழ்ச்சிகள் தெரியுமாதலால், ராமன்,ஸீதை, லக்ஷ்மணனை பஞ்சவடி என்னும் இடத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொள்ளுமாறு சொல்கிறார். [ஸர்கம் 13]

பஞ்சவடி போகும் வழியில் அவர்கள் ஜடாயு என்னும் பக்ஷி அரசனை சந்திக்கிறார்கள். தான் தசரத மஹாராஜாவின் நண்பன் எனவும், ராமனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வதாகவும் ஜடாயு கூறுகிறார். [ஸர்கம் 14]

பூக்கள், மரங்கள், நிரம்பிய அழகிய கோதாவரி ஆற்றின் அருகில் இருக்கும் பஞ்சவடியில் லக்ஷ்மணன் ஒரு பர்ண சாலை (வைக்கோலினால் ஆன ஆஸ்ரமம்) அமைக்கிறான். அழகிய பர்ணசாலை அமைத்ததற்கு லக்ஷ்மணனை ராமன் ஆறத் தழுவிக் கொள்கிறான். க்ரக ப்ரவேஸம் செய்த பின்னர் அவர்கள் பர்ணசாலைக்குள் நுழைகிறார்கள். [ஸர்கம் 15]

அங்கு இருக்கும்போது ஸூர்ப்பனகை என்ற ராக்ஷஸி வருகிறாள்; ராமனது அழகைக் கண்டு மோஹித்து, தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு ராமனை கேட்கிறாள் (ஸர்கம் 17)

”தான் ஏற்கனவே மணமானவன்,” என ராமன் கூறி, அவளை லக்ஷ்மணனிடம் போக சொல்கிறார். லக்ஷ்மணனும் மறுக்கிறான். இதனால் கோபமுற்ற ஸூர்ப்பனகை ஸீதையை கொல்ல அவளிடம் செல்ல, கோபமுற்ற லக்ஷ்மணன் ஸூர்ப்பனகையின் மூக்கையும், காதுகளையும் அறுத்து எறிகிறான். (ஸர் 18)

அழுது கொண்டே அவள் தன் அண்ணா கரனிடம் சென்று தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி, ராமனை அழிக்க சொல்கிறாள். கரனும் 14 ராக்ஷசர்களை அனுப்புகிறான். (ஸர் 19)

ராமன் 14 ராக்ஷசர்களையும் ஒரு நொடியில் அழித்து விட, ஸூர்ப்பனகை மீண்டும் கரனிடம் சென்று முறையிடுகிறாள் (ஸர் 20)

கரனும் இப்போது 14,000 ராக்ஷசர்களை அழைத்துப் போய் ராமனிடம் போர் புரிய போகிறான். ராக்ஷசர்களுக்கும் ராமனுக்கும் நடக்கும் முதல் போர் இது. (ஸர் 22)

ஸீதை லக்ஷ்மணனுடன் பத்திரமாக அனுப்பிவிட்டு ராமனும் 14,000 ராக்ஷசர்களுடன் போர் புரிகிறான் (ஸர் 23-25)

தூஷன்,திரிஷிரா என்னும் அரக்கர்களுடன் சேர்ந்து கரன் போர் புரிய, ராமன் முதலில் திரிஷிராவையும் அடுத்து தூஷனையும் அழிக்கிறான். கடைசியில் கரனையும் கொல்கிறான். (ஸர் 26-30)

ராவணனின் ஒற்றனான அகம்பன் ராவணனிடம் ஓடிப் போய் இவர்கள் யாவரும் அழிந்ததை கூறி, ஸீதையை கவர்ந்து வருமாறு சொல்கிறான். தாடகையின் மைந்தனான மாரீசனிடம்  ராவணன் சென்று ஆலோசனை கேட்கிறான். மாரீசன் “ராமன் விஷ்ணுவின் அவதாரம்; அவனுடன் சண்டையிட வேண்டாம்,” என புத்திமதி சொல்கிறான். (ஸர் 31)

அடுத்து ஸூர்ப்பனகை அங்கு சென்று ராவணனின் புத்தியை பலவிதமாக பேதலிக்கச் செய்து ஸீதையை கவர்ந்து வருமாறு வற்புறுத்துகிறாள். (ஸர் 33)

ராமனின் வலிமையை பற்றி ஸூர்ப்பனகை விளக்குகிறாள் (34)

இவ்வாறு ராவணன் மதி மயங்கியதால், அவன் மாரீசனிடம் மீண்டும் சென்று பொன்மான் போல வேஷமிட்டுச் சென்று தந்திரமாக ஸீதையை மயக்கிவிட்டால், ராமனும் லக்ஷ்மணனும் பர்ணசாலையை விட்டு நீங்கி விடுவார்கள், பின்னர் ஸீதையை கவர்ந்து வர ராவணனுக்கு சுலபமாக இருக்கும் என மாரீசனை கேட்டுக் கொள்கிறான். (ஸர் 36)
  ராமனிடம் சண்டை வேண்டாம் என மாரீசன் நிறைய அறிவுரை கூறுகிறான். தாடகா வனத்தில் தான் பட்ட கஷ்டங்களை எடுத்துக் கூறுகிறான். ஸீதையை கவர்வதற்கு எந்த முயற்சியும் வேண்டாம் எனவும் கூறுகிறான். (ஸ்ர் 37-39)

ஸீதையை கவர்வதற்கு மாரீசன் உதவாவிட்டால், அவனை அப்போதே கொன்று விடுவதாக ராவணன் சொல்கிறான்,  ராவணன் மட்டுமல்ல, ராக்ஷச வம்சமே அழிந்துவிடும் என பல புத்திமதிகளை சொல்லியும், ராவணன் கேட்பதாக இல்லை. எனவே அவனுக்கு உதவ மாரீசன் கடைசியில் ஒத்துக் கொள்கிறான்.  ( ஸர் 40 - 41 )

ராவணனும், மாரீசனும் பறக்கும் தேரில் ஏறி தண்டகாரண்யத்தில் ராமனின் ஆஸ்ரமம் அருகில் செல்கிறார்கள்.  ஒரு அழகிய பொன் மானாக மாரீசன் தன் உருவை மாற்றிக் கொண்டு, இங்கும் அங்குமாக ஸீதையின் பார்வையில் அலைகிறான். லக்ஷ்மணனுக்கு இது மான் இல்லை, மாரீசன் பொய் உருவில் வந்திருக்கிறான் என்பது தெரிந்த போதிலும், ஸீதை அவனை கேட்பதாக இல்லை. தனக்கு அந்த மான் வேண்டுமென ராமனை வற்புறுத்துகிறாள்.  ராமனும் மான் பின்னால் செல்கிறான். ( ஸர் 42 - 43)

நிறைய தூரம் அலைக்கழித்த மானை அம்பு விட்டு ராமன் கொன்று விடுகிறான். இறப்பதற்கு முன், மாரீசன் ராமன் குரலில், “ஓ ஸீதா, ஓ லக்ஷ்மணா” என ஓலமிடுகிறான். (இது ராவணன் சொன்ன யுக்தி.) இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, ராமன் ஆஸ்ரமத்திற்கு விரைகிறான்.  (ஸர் 44)


அரண்யா காண்டம் தொடரும்.....

ராஜப்பா
5 ம்ணி
16-07-2013










Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...