மதுராந்தகம் – செங்கல்பட்டுக்கு அருகே உள்ள ஒரு சிறிய ஊர் . இங்கு உள்ள ஏரி மிக பிரம்மாண்டமானது . 2238 ஏக்கர் நீர் பரப்பளவில் நிறைந்து , ததும்பி வழியும் பெரிய்ய்ய ஏரி . வருஷம் 1798. செங்கல்பட்டை நிர்வகித்து வந்தார் கலோனல் லையோனல் ப்ளேஸ் (Colonel Lionel Blaze) என்னும் ஆங்கிலேயர் . வருஷந்தோறும் கொட்டும் மழையினால் ஏரி உடைந்து அழிவு ஏற்படும் . அந்த வருஷம் வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக மழை கொட்டியது . ஏரி உடைந்தால் சுற்றியுள்ள பல கிராமங்கள் அழியும் , உறுதி . பயந்த மக்கள் , கலெக்டரிடம் சென்று , ஏரியை காக்க உடனடியாக காபந்து பண்ணுமாறு வேண்டினர் . அவரோ கேலியும் , கிண்டலுமாக , “ ஏன் , நீங்கள் தினம் தினம் வணங்குகிறீர்களே அந்த தெய்வம் வந்து காக்கட்டுமே !!” என பதிலளித்தார் . இரவில் , மழை இன்னும் பலத்தது ; நிச்சயம் ஏரி உடைந்து விடும் என எண்ணி , நடு இரவில் தன்னந் தனியானாக கலெக்டர் மட்டும் குடை பிடித்துக் கொண்டு ஏரி பக்கம் சென்றார் . ஏரி மிக வேகமாக நிரம்பிக் கொண்டிருந்தது . இவருக்கும் பயம் பிடித்துக் கொண்டத...