Skip to main content

Eri Kaaththa Ramar


மதுராந்தகம்செங்கல்பட்டுக்கு அருகே உள்ள ஒரு சிறிய ஊர். இங்கு உள்ள ஏரி மிக பிரம்மாண்டமானது. 2238 ஏக்கர் நீர் பரப்பளவில் நிறைந்து, ததும்பி வழியும் பெரிய்ய்ய ஏரி.
வருஷம் 1798. செங்கல்பட்டை நிர்வகித்து வந்தார் கலோனல்  லையோனல் ப்ளேஸ் (Colonel Lionel Blaze) என்னும் ஆங்கிலேயர். வருஷந்தோறும் கொட்டும் மழையினால் ஏரி உடைந்து அழிவு ஏற்படும். அந்த வருஷம் வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக மழை கொட்டியது. ஏரி உடைந்தால் சுற்றியுள்ள பல கிராமங்கள் அழியும், உறுதி.

பயந்த மக்கள், கலெக்டரிடம் சென்று, ஏரியை காக்க உடனடியாக காபந்து பண்ணுமாறு வேண்டினர். அவரோ கேலியும், கிண்டலுமாக, “ஏன், நீங்கள் தினம் தினம் வணங்குகிறீர்களே அந்த தெய்வம் வந்து காக்கட்டுமே !!” என பதிலளித்தார்.
இரவில், மழை இன்னும் பலத்தது; நிச்சயம் ஏரி உடைந்து விடும் என எண்ணி, நடு இரவில் தன்னந் தனியானாக கலெக்டர் மட்டும் குடை பிடித்துக் கொண்டு ஏரி பக்கம் சென்றார். ஏரி மிக வேகமாக நிரம்பிக் கொண்டிருந்தது. இவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு சக்தி வாய்ந்த மின்னல்

அந்த வெளிச்சத்தில் அந்த கலெக்டர் கண்டது கண்கொள்ளா திவ்ய காக்ஷி. இரு வாலிபர்கள் வில்லும் கையுமாக ஏரியின் கரையில் இங்கும் அங்கும் நடந்து ஏரியை காத்து வருவதை அவர் கண்டார். சில நொடிகள்தான்.
காலையில் மீண்டும் வந்த கலெக்டர், மழை ஓய்ந்ததையும், ஏரிக்கு ஒரு ஆபத்தும் வரவில்லை என்பதையும் கண்டு வியந்தார். கிராம மக்கள் வணங்கும் அந்த தெய்வம்தான் ஏரியை காத்தது என்பதை உணர்ந்து கொண்டு, அந்த க்ஷணம் முதல் அந்த கண்கண்ட தெய்வம் ஸ்ரீராமனுக்கு தீவிர பக்தன் ஆனார், தொண்டரும் ஆனார்.

மறுநாளே ஸ்ரீராமன் கோயிலுக்கு வலது பக்கத்தில் தாயார் ஜனகவல்லிக்கு (ஸீதம்மா) தனி கோயில் கட்டினார். இன்று நீங்கள் அங்கு போனால், இந்த தாயார் கோயிலையும், அதில் கல்வெட்டில் கலெக்டர் குறித்து எழுதியிருப்பதையும் பார்க்கலாம்.
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (15-11-2013) முதல் சில நாட்களுக்கு இந்த ஏரி காத்த ஸ்ரீராமன் கோயிலை காண்பித்து, விளக்குவார். ஸ்ரீராமஜெயம்.

rajappa
15-11-2013

 

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...