சுந்தர காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆக நான்கு காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக கிஷ்கிந்தா காண்டத்தை 25-12-2013 அன்று நிறைவு பண்ணினார். 26-12-2013 வியாழன் முதல் சுந்தர காண்டம் தொடங்கினார். [பகுதி 450] ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான காண்டம் இது. மொத்தம் 68 ஸர்கங்கள் உள்ளன. ராம தூதனாக ஹனுமான் லங்கா நோக்கிப் புறப்படுகிறார். கடலை கடக்க மேலே பறக்கிறார். இடையில் இருந்த மய்நாகா மலையை இடித்து. த்ள்ளி செல்கிறார். தன் மீது உட்கார்ந்து சிறிது இளைப்பாறி செல்லுமாறு மலை விண்ணப்பிக்கிறது. அன்புடன் அதை மறுத்து, ஹனுமான் மேலே செல்கிறார். அடுத்து சுரஸா என்னும் ராக்ஷசியின் வாயில் நுழைந்து அதே வேகத்தில் வெளியே வந்து பறக்க ஆரம்பிக்கிறார். அடுத்து ஸிம்ஹிகா என்னும் ராக்ஷசியையும் முடிக்கிறார். கரையை கடந்து லங்கா நகரை ...