Skip to main content

Posts

Showing posts from July, 2014

Valmiki Ramayanam - 600

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபந்யாஸம் 2012-ஆம் வருஷம் ஏப்ரல் 01-ஆம் தேதியன்று (அன்று ஸ்ரீராம நவமி) ஆரம்பித்தார். இரண்டு வருஷங்களுக்கு மேல் ஓடிவிட்டன; இன்று (24 ஜூலை 2014) உபந்யாஸத்தின் 600- வது பகுதி. இந்தர்ஜித் செலுத்திய ப்ரஹ்மா அஸ்த்திரத்தினால் மயக்கமுற்று கீழே விழுந்த ஸ்ரீ ராமனையும், ஸ்ரீ லக்ஷ்மணனையும் உயிர்ப்பிக்க, “சஞ்சீவனி” முதலான நான்கு மூலிகைகளை கொண்டு வருமாறு ஜாம்பவான் ஹனுமானிடம் ஆணையிட, ஹனுமான் இமயமலை நோக்கி புறப்படுகிறார். [யுத்தகாண்டம், 74 ... வது ஸர்கம்] இதுவரை அவர் சொல்லியுள்ள 600-ல் குறைந்தது 595-ஐ நானும், விஜயாவும் கேட்டிருப்போம். எல்லாருக்கும், ஸ்ரீ ஹனுமான், ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமர் ஆகியோர் அருள் பாலிக்கட்டும். ஸ்ரீராமஜெயம். rajappa 24-07-2014  

ஒரு இனிய மாலைப்பொழுது

கடற்கரை இன்று 16-ஜூலை-2014 மாலை நானும் விஜயாவும் வெளியில் சென்றோம். மினி பஸ் பிடித்து (6.00 டிக்கெட்) பெஸண்ட் நகர் சென்று பீச்சிற்கு சென்றோம். பீச்சில் அரை மணி நேரம் நடந்தோம்; பின்னர் 20 நிமிஷங்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். அடுத்து, தண்ணீர் அருகே சென்றோம். வெறும் காலோடு சமுத்திர மணலில் நடப்பதே தனி சுகம். தண்ணீரை பார்த்துக் கொண்டு 15 நிமிஷம் போக்கினோம்.   அடுத்து, 15 நிமிஷம் நடந்து ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குள் நுழைந்தோம். சாயரக்ஷை தீபாராதானை பார்த்தோம்..இந்த விநாயகர்  எனக்கு மிகவும் பிடித்த விநாயகர். பெஸண்ட் நகரில் இருந்தபோது வாரத்திற்கு 5 முறையாவது செல்வேன். மீண்டும் மினி பஸ் - வீடு திரும்பினோம்; மனசுக்கு மகிழ்ச்சியாக ஒரு இனிய மாலைப் பொழுது. ஆண்டவனுக்கு கோடி நமஸ்காரங்கள். ராஜப்பா 16-07-2014

வேளச்சேரியில் ஒரு கல்யாணம்.

நேற்று மாலை (13-07-2014, ஞாயிறு), நான், விஜயா, அதிதி மூவரும் வேளச்சேரியில் ” களஞ்சியம் திருமண மண்டபத்தில்” ஒரு கல்யாண வரவேற்பிற்கு சென்றோம். என்ன ஒரு EXPENSIVE வரவேற்பு ! மண்டபம் முழுதும் ஏசி குளிர். Centralised AC. மேலே சாப்பாட்டு கூடத்திலும் ஏசி ! பெரிய்ய ஹால். பெரிய்ய சாப்பாட்டுக் கூடம். மாலை 6 மணிக்கு போனாலும், டிஃபன் காத்திருந்தது. கேஸரி முதலான 4 வகை டிஃபன். காஃபி. பழ ஜூஸ் கொடுத்துக் கொண்டே இருந்தனர். இரவு உணவு தடபுடல் - உருளைக்கிழங்கு ரோஸ்ட், ராய்த்தா, இனிப்பு பச்சடி, வறுவல், பூரி, ஊத்தப்பம், குருமா, CHOLE மசாலா, கட்லெட், காலிஃப்ளவர் மஞ்சூரியன், பப்படம், புலவ், சாம்பார் சாதம்,  வெள்ளை சாதம், ரஸம், தயிர் சாதம், தொட்டுக்கொள்ள வத்தல் குழம்பு, ஊறுகாய்,பாயஸம், பாதாம் கீர், பாதாம் பர்ஃபி, ஸூப் ... கைகழுவிக் கொண்டு வந்தால், பானி பூரி, ஃப்ரூட் ஸாலட், ஐஸ்கிரீம், பீடா. ஆண்டவா, இவ்வளவு வகை உணவு தேவையா ? உணவு எவ்வளவு வீணாகிறது ? ராஜப்பா 14-07-2014

Aanmikam and Sevai

இன்று மாலை நாங்கள் இருவரும் திருவான்மியூரில் ஒரு மாபெரும் கண்காட்சிக்கு சென்றோம். ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவை என்னும் குழுமம் இதை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக சென்னையில் நடக்கும் கோயில்கள், சேவை மையங்கள், உதவிக்கரங்கள் ஆன்மீக மையங்கள் என நூற்றுக்கும் அதிகமாக ஸ்டால்கள் இருக்கின்றன. திருப்பதி-திருமலா தேவஸ்தானம் முதற்கொண்டு யாதகிரிகுட்டா வரை ஆந்திராவில் உள்ள நிறைய ஸ்தலங்களும், கர்னாடகாவில் உள்ள பல ஸ்தலங்களும், இங்கு ஸ்டால் அமைத்துள்ளன. இதுதவிர ஆந்திர மாநில கோவில்களின் சுவாமிகளின் திருவுருவோடு தர்மபிரச்சார ரதங்களும் கண்காட்சி அரங்கில் பக்தர்களின் தரிசனத்துக்காக சென்னைக்கு வருகின்றன. ஸ்ரீசைலம், காளஹஸ்தி, காணிப்பாக்கம், த்வரஹா திருமலை, திருமலை திருப்பதி, கனகதுர்க்கா- விஜயவாடா, யாதகிரி குட்டா ஆகிய இடங்களில் இருந்து ரதங்கள் வருகின்றன. இவை கண்காட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. காளஹஸ்தி ரதத்தில் எழுந்தருளியுள்ள ஞானப் பிரசன்னாம்பிகா சமேத காளகஸ்தீஸ்வரருக்கு ராகுகால பூஜைகள் நடக்கிறது. இதேபோன்று விஜயவாடா கனகதுர்க்...