முள்ளங்கி , Radish, முளி ( ஹிந்தியில் ) என பல பெயர்களில் இந்த கிழங்கு அழைக்கப்படுகிறது . ( எனக்குத் தெரிந்தவரை ) இது வெள்ளை நிறத்திலும் , சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது . உருண்டையாக , நீளமாக , இரண்டு விதத்திலும் கிடைக்கிறது . சிவப்பு முள்ளங்கி ( நீளம் ) சென்னையில் சில சமயம் தான் கிடைக்கிறது . இதன் கிழங்கு பாகத்தையும் , கீரையையும் சாப்பிடலாம் . பற்பல மருத்துவ குணங்கள் நிரம்பியது . இதய நோய்கள் , இரத்த அழுத்தம் , தோல் ப்ரச்னை , ஆஸ்துமா , சிறுநீர் வியாதிகள் , சளி , இன்னபிற நோய்களுக்கு இது சிறந்த மருந்து . இதன் சாற்றை தேனுடன் கலந்து சிறு குழந்தைகளுக்கு கூட தினமும் தரலாம் . கிழங்கை தமிழ்நாட்டில் சாம்பாராகவும் , கறியாகவும் செய்து சாப்பிடுகிறோம் . வடநாட்டில் பராத்தாவாக சாப்பிடுகிறார்கள் . முள்ளங்கி கீரை இளசாக இருந்தால் சாப்பிடலாம் . பெங்களூரிலும் , புனே , தில்லியிலும் முள்ளங்கி கீரையை சாப்பிட்டு இருக்கிறேன் . மற்ற அரைத்து விட்ட சாம்பார்களைப் போலவே முள்ளங்கி சாம்பாரும் செய்ய வேண்டும் . முள்ளங்கி எனக்கு மிகவும் பிடித்த கிழங்கு . இன்று (21st) காலை திருவா...