விஜயாவின் அக்கா இந்திரா சுப்ரமணியத்திற்கு 22-07-2015 அன்று 80 வயது பூர்த்தியாகிறது. இதையொட்டி, 19-07-2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அகிலா வீட்டில் ஒரு லஞ்ச் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். நான், விஜயா, அஷோக், ஸ்ரீராம் ஆகியோர் காலை 10-30 மணிக்கு அருண் காரில் வளசரவாக்கம் சென்றோம். பின்னர், அர்விந்த், கிருத்திகா, காயத்ரி, நீரஜா, சௌம்யா, அதிதி, அர்ஜுன் ஆகியோர் வந்தனர். அகிலா, ராஜா, லக்ஷ்மி, அவள் 2 பெண்கள், அபர்ணா, வசந்த், ச்ரேயஸ், லலிதா, குமார், ஜனனி, ராம்சுந்தர், ப்ரத்யுன், ஆகியோர் வந்தனர். இந்திரா கேக் கட் பண்ணினாள். பின்பு, லஞ்ச். பிஸிபேளா, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு ரோஸ்ட், அவியல், பாயஸம், அப்பளம் -- மெனு. விஜயா நிறைய குலாப் ஜாமுன் செய்திருந்தாள். எல்லாமே நன்றாக இருந்தன. நாங்கள் (மயிலாப்பூர்) குமரன் கடையிலிருந்து ஒரு புடவை வாங்கி இந்திராவிற்கு பரிசளித்தோம். அஷோக் ஆடியோ சிடி வாங்கினான். அஷோக் நீரஜா வெள்ளிக்கிழமை (17) இரவு பெங்களூரிலிருந்து வந்தனர். ஞாயிறு பகல் 4 மணி பஸ்ஸில் திரும்பினர். நாங்களும் 4 மணிக்கு வீடு திரும்பினோம். நிறய ஃபோட்டோக்கள் ...