Skip to main content

Posts

Showing posts from July, 2017

HELP OTHERS

HELP OTHERS நேற்று நான் எழுதியதில் சாராம்சம் உருளைக்கிழங்கு பொடிமாஸ் - சின்ன வெங்காயம் சாம்பார் அல்ல. அது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே. பதில் எழுதும்போது பலரும் கிழங்கிற்கும், வெங்காயத்துக்கும் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அது தப்பு என சொல்ல மாட்டேன். ”அந்த” நாட்களில் பலருடைய குடும்பங்கள் எவ்வளவு ஏழ்மையில் இருந்தன; அப்படி இருந்தும் எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தோம் என்பதுதான் சாராம்சம். உதாரணத்திற்கு ”ஜிஆர்எஸ் - சம்பூரணம் அம்மாள்” குடும்பத்தையே எடுத்து கொள்கிறேன். இதுதான் பல குடும்பங்களிலும் இருந்தது. ஜிஆர் எஸ் 1956-ல் வேலை ஓய்வு பெற்றார். போஸ்ட் மாஸ்டராக என்ன சம்பளம் கிடைத்திருக்கும்? (நான் 1963-ல் புகழ்பெற்ற defence ஆஃபீஸில் சேரும்போது என்னுடைய முதல் மொத்த சம்பளம் 250க்கும் கீழ். 1956-ல் தாத்தாவிற்கு என்ன கிடைத்திருக்கும்? பத்மா அத்தைக்கு 1955-ல் திருமணம்; அண்ணாவிற்கு 1956-ல் திருமணம். இரண்டு திருமணங்களுக்கும் செலவு செய்திருப்பார். அண்ணாவிற்கு மட்டுமே வேலை; அதுவும் சொற்ப சம்பளத்தில். அண்ணாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டது, மன்னியும் வந்தாயிற்று. வேறு யாருக்குமே வ...