Skip to main content

HELP OTHERS

HELP OTHERS

நேற்று நான் எழுதியதில் சாராம்சம் உருளைக்கிழங்கு பொடிமாஸ் - சின்ன வெங்காயம் சாம்பார் அல்ல. அது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே. பதில் எழுதும்போது பலரும் கிழங்கிற்கும், வெங்காயத்துக்கும் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அது தப்பு என சொல்ல மாட்டேன்.

”அந்த” நாட்களில் பலருடைய குடும்பங்கள் எவ்வளவு ஏழ்மையில் இருந்தன; அப்படி இருந்தும் எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தோம் என்பதுதான் சாராம்சம். உதாரணத்திற்கு ”ஜிஆர்எஸ் - சம்பூரணம் அம்மாள்” குடும்பத்தையே எடுத்து கொள்கிறேன். இதுதான் பல குடும்பங்களிலும் இருந்தது.

ஜிஆர் எஸ் 1956-ல் வேலை ஓய்வு பெற்றார். போஸ்ட் மாஸ்டராக என்ன சம்பளம் கிடைத்திருக்கும்? (நான் 1963-ல் புகழ்பெற்ற defence ஆஃபீஸில் சேரும்போது என்னுடைய முதல் மொத்த சம்பளம் 250க்கும் கீழ். 1956-ல் தாத்தாவிற்கு என்ன கிடைத்திருக்கும்? பத்மா அத்தைக்கு 1955-ல் திருமணம்; அண்ணாவிற்கு 1956-ல் திருமணம். இரண்டு திருமணங்களுக்கும் செலவு செய்திருப்பார்.

அண்ணாவிற்கு மட்டுமே வேலை; அதுவும் சொற்ப சம்பளத்தில். அண்ணாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டது, மன்னியும் வந்தாயிற்று. வேறு யாருக்குமே வேலை கிடையாது. சுந்தரேசனுக்கு 19 வயது (1956ல்), எனக்கு 15 வயது. அப்பா என்னை அண்ணாமலை பல்கலையில், அதுவும் ஹாஸ்டலில் சேர்த்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறு வருஷம் ஹாஸ்டலில் தங்கி படித்தேன் எவ்வளவு செலவாகியிருக்கும் !!!? சுந்தரேசன் வேலையில் சேர்ந்த பிறகு, அவன் அப்பாவிற்கு மாசா மாசம் பணம் அனுப்பி அவரது சுமையை  குறைத்தான்.

இடையில் சரோஜா அத்தை (1960), பின்னர் சாவித்திரி அத்தை (1966) கல்யாணம். செலவு. 1963ல் நானும், கிட்டத்தட்ட அதே சமயத்தில் சுகவனமும், ஜெயராமனும் வேலைக்கு வந்தோம். நான்கு பேரும் (சுந்தரேசன், நான், சுகவனம், ஜெயராமன்) பணம் அனுப்பி அப்பா - அம்மாவின் சுமையை குறைத்தோம். 1970-ல் சாவித்திரி அத்தை நம் வீட்டிற்கே திரும்ப வந்தார், 2 கைக்குழந்தைகளுடன். பழைய மாதிரி இல்லாவிட்டாலும் மீண்டும் பணக்கஷ்டம். 1973-ல் மங்களம் அத்தை கல்யாணம். சிறப்பாகவே நடந்தது.

கூடவே, அண்ணாவின் குடும்பமும் பெரிதாக ஆயிற்று. 7 குழந்தைகள், 1969க்குள். அண்ணாவும் தன் ஒரே சம்பளத்தில் குடும்பத்தை நன்றாக நடத்தினார். எல்லாரையும் நன்கு படிக்க வைத்தார். 1980ன் ஆரம்பத்தில் வாசு, ஸ்ரீதர் ஆகியோர் வேலைக்கு வந்ததும் தான் அண்ணா வீட்டிலும் கஷ்டம் குறைந்தது.

எதுக்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், 1945-லிருந்து 1970 வரை ஜிஆர் எஸ் குடும்பமும் மிகவும் கஷ்ட ஜீவனமாக இருந்தது. சாவித்திரி அத்தை சொல்லுவாள், “ அம்மாவின் பழைய புடைவை கிழிந்து, அதை தைத்து, தைத்து, அம்மா உடுத்திக் கொள்வாளாம்; இனி தைக்கவே முடியாது என்ற நிலை வந்த பிறகு அதை ஜாக்கிரதையாக கிழித்து முதலில் தாவணியாகவும் பின்னர் அதையும் கிழித்து, பாவாடையாகவும் போட்டுக் கொள்வோம்” என்ன கொடுமை !

நிலைமை இது போன்று இருக்கும்போது வாரத்திற்கு ஒரு முறை, இல்லை இல்லை, ஆறு மாசத்திற்கு ஒருமுறையாவது உருளைக்கிழங்கு பொடிமாஸ், வெங்காய சாம்பாரா கிடைக்கும்???? அதைத்தான் எழுத்தாளர் லா ச ராமாமிர்தமும், நானும் எழுதினோம். பொடிமாஸ், சாம்பார் இரண்டும் உவமானத்திற்கு மட்டுமே.

எந்த ஒரு வஸ்துவும் மிகவும் துர்லபமாகவே கிடைக்கும். காலணா அல்லது அரையணாவிற்கு பொட்டலத்தில் அம்பி அய்யர் கடையில் பக்கோடா கிடைக்கும். ஒரு பொட்டலம் 3 பேருக்கு என பங்கு போட்டு அப்பா தருவார்; அந்த பக்கோடாவை சாப்பிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி ....  ஓ சொல்லி மாளாது!

இன்று, நம் எல்லாரிடமும் நெறய்ய பணம் இருக்கிறது - தாத்தா, பாட்டி, உங்கள் அம்மா, அப்பா ஆசீர்வாதத்தினால். இல்லாதவர்களுக்கும், கஷ்டப்படுவோர்களுக்கும் குழந்தைகளுக்கும் முடிந்த அளவுக்கு, தானம் தர்மம் செய்வோம். நம் முன்னோர்களின் ஆசிகளை பெறுவோம்.

ராஜப்பா
12-7-2017



Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...